மெக்சிகோவின் கலாபகோஸ் தீவுகள்! - ரெவில்லேஜிஜெடோ தீவுகள்

 









மெக்ஸிகோவின் கடற்புரத்தில் ரெவில்லேஜிஜெடோ தீவுகள் அமைந்துள்ளன. இவற்றை மெக்ஸிகோவின் கலாபகோஸ் என்று புவியியலாளர்கள் அழைக்கிறார்கள். இதற்கு, இங்கு காணப்படும் பல்லுயிர்த்தன்மையே முக்கியக் காரணம். கடல் பகுதியில் அமைந்துள்ள சங்கிலித் தொடரான தீவுக்கூட்டங்களுக்கு ஆர்ச்சிபெலகோ என்று பெயர். 

இவற்றில் நிறைய எரிமலைகள் அமைந்துள்ளன. இவை என்ன காரணத்தில் வெடிப்புக்குள்ளாகின்றன என்பதை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.  1953ஆம் ஆண்டு பார்சினாவில் உள்ள ஆர்ச்சிபெலகோ எரிமலை லாவாவை வெளியேற்றியது. பிறகு, 1993 ஆம் ஆண்டு பசிபிக் பகுதியிலுள்ள எவர்மன் எரிமலை, வெடித்தது.இந்த இரண்டு எரிமலைகள் இரண்டுமே இன்று வரை இயங்கி வருகின்றன. “நாங்கள் இந்த எரிமலையில் வெளியாகும் லாவா அளவையும், ஏற்படும் ஆபத்து பற்றியும் ஆராய்ந்து வருகிறோம்” என்றார் நெதர்லாந்தின் உட்ரெச்ட் பல்கலைக்கழக பேராசிரியரான தூவே வான் ஹின்ஸ்பெர்ஜன் ().

எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற ஆபத்தை ஏற்படுத்தும் என்ற பயம் இருப்பதால்தான் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் பயப்படுகின்றனர். எனவே, எரிமலைகளின் வெடிப்பை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

 லாவாவில் கிடைத்த கனிமங்களை ஆராய்ந்து, புவித்தட்டு நகர்களைக் கணித்து எரிமலை வெடிப்பை மதிப்பிட முயன்று வருகின்றனர். எரிமலை வெடிப்பிற்கு பூமியின் அடித்தட்டு நகர்வும், அதன் வெப்பம் பரிமாற்றம் ஆவதும் எரிமலை வெடிப்பை ஊக்குவிக்க வாய்ப்புள்ளது என ஹின்ஸ்பெர்ஜன் கருதுகிறார். தீவுகளில் உள்ள எரிமலை மாதிரிகளைப் பெற்று அதனை ஐரோப்பாவில் உள்ள ஆய்வகங்களில் சோதனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. விரைவில் இதுபற்றிய இறுதி முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. 


 



scouring mexico galapagos for quake volcano clues

agence france presse

HT school 27.4.2022

https://phys.org/news/2022-04-scientists-scour-mexico-galapagos-quake.html

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்