தனியே தன்னந்தனியே.... கடிதங்கள் - கதிரவன்
28.2.2022
மயிலாப்பூர்
அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?
எப்படி இருக்கிறீர்கள்? நான் புத்தகத் திருவிழாவில் வாங்கிய நூல்களை இன்னும் படிக்கவில்லை. இப்போதுதான் சுப்ரதோ பக்ஷியை முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். எங்கள் நாளிதழ் அலுவலகத்தில் இருந்து ஒன்றிய அரசு விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதி வெளியேறிவிட்டார். அதாவது, வேறு உயர்ந்த சம்பளம் கொண்ட வேலைக்குப் போகிறார். நான் அவருடன் சில மாதங்களாக பேசுவதில்லை. இறுதியாக இன்று வாழ்த்துச் செய்தி மட்டுமே அனுப்பினேன். நான் ஆபீசில் கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு உதவியவர் அவர். அவர் கவனித்த பக்கங்களை பார்த்துக்கொள்ள புதிய உதவி ஆசிரியர் வருவார். அல்லது இப்போதுள்ள உதவி ஆசிரியர்களே பகிர்ந்துகொள்ளவேண்டும்.
நேற்று குரூப் மலையாளப் படத்தை பார்க்கத் தொடங்கினேன். படத்தை நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். இன்னும் முழுதாக பார்க்கவில்லை.
வீட்டில் அம்மாவுக்கு தைராய்டு பிரச்னை தொடங்கிவிட்டது. அதற்கான மருந்தை அவள் சாப்பிடவேண்டும். சாப்பிட்டு வருகிறாள். ஊரில் இருந்து ஈரோடு டவுனில் தனியாக வீடு எடுத்து தங்குவாள் என நினைக்கிறேன். இனி அப்பா கிராமத்தில் சௌகரியமாக இருப்பார். அம்மா ஈரோட்டில் வாடகை அறையில் இருப்பாள். இந்த செயல் எப்போதோ நடக்கவேண்டியது, அம்மா இப்போதுதான் ஒருவழியாக முடிவெடுத்து தனியாக இருக்கிறேன் என்கிறாள். அவரவர் வாழ்க்கை அவரவர் முடிவு. நாம் செய்ய என்ன இருக்கிறது? உங்கள் உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி!
அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக