உலகம் முழுக்க நிதிச்சேவையில் சாதித்த தொழிலதிபர்கள்! -

 









கில்லாமே பௌசாஸ் 

சொத்து மதிப்பு -23 பில்லியன் 

குடியுரிமை - சுவிட்சர்லாந்து

2012 ஆம் ஆண்டு பௌசாஸ் செக்அவுட்.காம் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். கடைகள், வாடிக்கையாளர்கள் என ஆன்லைனில் பணத்தைக் கட்டும் தீர்வுகளை வழங்குகிறது. செக் அவுட்.காம். பௌசாஸூக்கு வயது 40. லண்டனில் வழங்கும் நிதிச்சேவையில் மூன்றில் இருபங்கு நிதிவணிகத்தை செக் அவுட் வலைத்தளம் வழங்குகிறது. இதன் தற்போதைய மதிப்பு 40 பில்லியன் டாலர்கள். நிதி நிறுவனத்திற்கு வரும் முன்னரே, பெரியளவு சாதித்தவர் என்றால் அப்படி ஏதும் இல்லை. கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர், கலிஃபோர்னியாவில் ஜாலியாக சர்ஃபிங் செய்துகொண்டிருந்தவர் பிறகு தான் நிதிச்சேவை பக்கம் வந்திருக்கிறார். 

பெருந்தொற்று காலத்திலும் செக் அவுட்.காம் பயன் அடைந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இருந்து தான் செய்யும் நிதி பரிவர்த்தனைகளை அதிகரித்துள்ளது. 







நிக் ஸ்ட்ரோன்ஸ்கி 

சொத்து மதிப்பு - 7.1 பில்லியன் டாலர்கள்

குடியுரிமை - இங்கிலாந்து, ரஷ்யா 


2015ஆம் ஆண்டு ரீவால்யூட் என்ற நிதிசேவை நிறுவனத்தை லண்டனில் தொடங்கினார். இதன் 2021ஆம் ஆண்டு மதிப்பு 33 பில்லியன் டாலர்கள். பதினெட்டு மில்லியன் வாடிக்கையாளர்களோடு மாதம் 150 மில்லியன் பரிவர்த்தனைகளை செய்து வருகிறது. உரிமையாளர் நிக்கிற்கு வயது 37. இதற்கு முன்னர் லேமன் பிரதர் நிறுவனத்தில் கடன் கொடுக்கும் பிரிவில் வேலை பார்த்திருக்கிறார். மே 2022இல் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட முதலீட்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கும் ஐடியாவை அறிவித்திருக்கிறார். 







டேவிட் வெலஸ்

சொத்து மதிப்பு 

 4 பில்லியன் டாலர்கள்

குடியுரிமை 

கொலம்பியா

நியூபேங்க் என்ற டிஜிட்டல் பேங்க் ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கு, 59.6 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். பிரேசில், மெக்சிகோ, கொலம்பியா ஆகிய பகுதிகளில் இதன் செயல்பாடு உள்ளது. 2013ஆம் ஆண்டு தொடங்கிய நிறுவனம். இதன் பின்னணியில் வாரன் பஃபெட்டின் பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனம் உள்ளது. டேவிட்டின் பங்குத்தொகை 23 சதவீதமாகும். இதன் மதிப்பு 7 பில்லியன் டாலர்களாகும். 

கிரிஸ் பிரிட்

சொத்து மதிப்பு - 2.2 பில்லியன் 

குடியுரிமை - அமெரிக்கா 

சிமே என்ற மொபைல் பேங்கிங் ஆப்பை கிரிஸ் பிராட் உருவாக்கினார். இதில் ஓவர் டிராஃப்ட் கட்டணம் கிடையாது. 2013ஆம் ஆண்டு தொடங்கிய நிறுவனத்தின் தலைமையகம் சான்ஃபிரான்சிஸ்கோ.  நிறுவன மதிப்பு 14.5 பில்லியன் டாலர்கள். இந்த நிறுவனம் நடப்பு ஆண்டில் பங்குச்சந்தையில் நிதிதிரட்ட எண்ணியுள்ளது. கிரிஸ் இதற்கு முன்னர் விசா, க்ரீன் டாட் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். 





வியாசெஸ்லாவ் கிம்

சொத்து மதிப்பு - 2 பில்லியன் 

குடியுரிமை - கசக்கஸ்தான்

கஜகஸ்தானின் நிதிச்சேவை வழங்கும் நிறுவனங்களில் காஸ்பி பேங்கும் ஒன்று. இந்த நிறுவனத்தின் பெயர், உலகம் முழுக்க பேசப்பட்டது லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிட்டபோதுதான்.  2011ஆம் ஆண்டு காஸ்பி பேங்க் உருவானது. இதனை உருவாக்கிய கிம்மிற்கு வங்கியில் 23 சதவீத பங்குகள் உள்ளது. வணிகர்கள், கடைகளுக்கான நிதிச்சேவைகளை காஸ்பி வங்கி வழங்கி வருகிறது. 

ஃபோர்ப்ஸ் இதழ் 









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்