இந்தியாவை உருவாக்கிய 5 விஷயங்கள்! - இந்தியா 75

 











இந்தியாவின் அரசியலமைப்பு குறிப்பிட்ட மதிப்புகளை அடிப்படையாக கொண்டதாக கட்டமைக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக இந்த மதிப்புகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இந்தியா என்று கூறப்படுவதன் அர்த்தமே கீழ்க்காணும் மதிப்புகள்தான். 

ஜனநாயகம்

பிரிவினை நடைபெற்று வந்த காலத்திலேயே இந்தியா தனது முதல் தேர்தலை நடத்துவதற்கு தயாராகி வந்தது. வாக்காளர் பட்டியலில் அனைத்து மக்களையும் சேர்க்கும் பணி தொடங்க வேண்டியிருந்தது. நாடாளுமன்ற செயலகம் மூலம் இதற்கான ஏற்பாடுகளை அரசியலமைப்பு ஆலோசகர் பிஎன் ராவ் செய்து வந்தார். 1950ஆம் ஆண்டு மார்ச் மாதம்,  தேர்தல் ஆணையத் தலைவர் சுகுமார் சென்னுக்கு இப்பணி ஒதுக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சேர்த்து தொகுக்கும் பணி நிறைவடைந்த ஆண்டு 1949. முதல் நாடாளுமன்ற தேர்தல் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. ஜனநாயகத்தன்மை கொண்ட நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கியபிறகு வயது வந்தோருக்கான வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டது. 

கூட்டாட்சி 

1970 தொடங்கி 80 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் கடுமையான முரண்பாடுகள் எழுந்தன. 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி ஆண்ட மாநிலங்களின் ஆட்சியை கலைத்தது. இந்த வகையில் 7 மாநிலங்களில் ஆட்சி கலைக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டு இதே செயல்பாடுதான். ஜனதா கட்சி ஆண்ட மாநிலங்களின் அரசை காங்கிரஸ் கட்சி கலைத்தது. கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்ஆர் பொம்மை, மத்திய அரசு மாநில அரசை கலைப்பது பற்றி குரல் எழுப்பினார். சட்டம் 356 இன் படி குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கலைப்பது பற்றி எஸ்ஆர் பொம்மை கேள்வி கேட்டார். சட்டம் 356, மாநிலத்தில் முழுமையாக அரசு இயந்திரம் செயலற்று போகும்போது அமல்படுத்தப்படுவது... எழுபது, எண்பதுகளுக்குப் பிறகு மத்திய அரசு மாநில அரசு ஆட்சியைக் கலைப்பது என்பது அவ்வப்போது தான் நடைபெறுகிறது. 

அதிகாரம் 

1975ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் பிரதமர் இந்திராகாந்தி தேர்தலில் முறைகேடாக வென்றார் என தீர்ப்பளித்தது. இதற்குப் பிறகுதான், அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு அரசு இயந்திரங்கள் முடக்கப்பட்டன. இந்திரா ரேபேலி தொகுதியில் வென்றது செல்லாது என அறிவிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. நீதித்துறை அரசை கவனிப்பது மூலம் அதை யாராவது கட்டுப்படுத்த முயன்றால் எளிதாக தடுக்கலாம். அரசுக்கு ஆதரவான ஆட்களை நீதித்துறையில் புகுத்திவிட்டால், அதனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. 

மதச்சார்பின்மை

சர்வ தர்மா சம்பவா என வாக்கியம் ஒன்றுண்டு. அனைத்து மதங்களையும் மரியாதை கொடுத்து மதிப்பது. இதனால் தான் அனைத்து மத பிரிவினரும் இந்தியாவில் அதிக பிரச்னைகளின்றி வாழ்ந்து வந்தனர். ஆண்டுதோறும் செப்டம்பர் - அக்டோபர் மாதம் சூபி துறவி ஒருவரின் சமாதிக்கு மக்கள் பூக்களை வைத்து வணங்குவார்கள். டெல்லியில் இந்த பழக்கம் உண்டு. மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பில் இருந்தாலும், மக்கள் அதை இயல்பாகவே கடைபிடித்து வந்தனர். 

சகோதரத்துவம்

இந்தியாவின் பன்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் சகோதரத்துவத்தை பி.ஆர் அம்பேத்கர் உருவாக்கி அரசியலமைப்பில் சேர்த்தார். அதற்கு முன்னர் அதில் சுதந்திரம், சமநிலை ஆகிய வார்த்தைகள்தான் இருந்தன. அதனுடன் சகோதரத்துவத்தை சேர்த்தார். இதன் காரணமாக 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள், 7 மதங்கள்  உள்ள இந்தியாவில் சகோதரத்துவம் காப்பாற்றப்படுவது உறுதிப்படுத்தப்பட்டது. 

டைம்ஸ் ஆப் இந்தியா 

விதி சென்டர் ஃபார் லீகல் பாலிசி 


குறிப்பு - இங்கு கூறப்பட்டவை உருவாக்கப்பட்டு இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டவை. ஆனால் இப்போது அல்ல. 








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்