மனநலக்குறைபாடு கொண்டவர்களோடு மல்லுக்கட்டு! - கடிதங்கள் - கதிரவன்

 









7.12.2021

மயிலாப்பூர்

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? உடல்நலனோடு மனநலனை பராமரிப்பது கடினமாக இருக்கிறது. நாம் அமைதியாக இருந்தாலும் உளவியல் பிரச்னை கொண்டவர்கள் ஏதாவது பிரச்னையை செய்துகொண்டே இருக்கிறார்கள். நமக்கு தொடர்புடையவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.  இதன் பொருட்டு சில சமயங்களில் நமக்கே பாதகமான முடிவுகளைக் கூட நாம் எடுக்கவேண்டியுள்ளது. 

அண்மையில் அலுவலகத்தில் சேர்ந்தவர், இதுபோல குறைபுத்தி கொண்டவர்களால் பாதிக்கப்பட்டார். என்னோடு டீ குடிக்க வருவதால் அவரை கார்னர் செய்தனர். எனவே, அலுவலக நண்பரை விட்டு தனியாக பிரிய முடிவெடுத்துள்ளேன். ஆசையா, நிம்மதியா என்றால் நான் நிம்மதியைத் தான் தேர்ந்தெடுப்பேன். 

நன்றி!

அன்பரசு 

---------------------------------------------------






11.12.2021

மயிலாப்பூர்

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? 

எங்கள் நாளிதழ் ஜனவரி தொடங்குவதாக கூறியிருக்கிறார்கள். கட்டுரைகள் எழுதி கணினியில் சேமிக்கத் தொடங்கிவிட்டேன். அலுவலகத்தில் லெஜண்ட் ஓவியரிடம் மட்டும்தான் பேசுகிறேன். கடவுளின் முகம் அவதாரங்களில் மாறி வருவதைப் போலவே சூழலுக்கு ஏற்ப அதிகாரம் கொண்டவர்களின் உடன்பிறப்பாக உதவி ஆசிரியர்கள், லே அவுட் டிசைனர்கள் மாறி வருகிறார்கள். 

எடிட்டர் தனது வேலையைக் காப்பாற்றிக்கொண்டால் போதும், இதில் எனக்கென்ன அக்கறை என செயல்பட்டு வருகிறார். இன்னும் இருவர் உதவி ஆசிரியர் குழுவில் இணையவிருக்கிறார்கள். அவர்கள் பெண்களாக இருப்பார்கள் என யூகம் உள்ளது. எனவே இனி அலுவலக சூழல் பஜார் தெரு மார்க்கெட் போலாகும் என தோன்றுகிறது. பெண்கள் ஒரு குழுவில் இருந்தாலே அவர்களுக்கு ஆதரவு எதிர்ப்பு என இருநிலையில் குழுக்கள் பிரிந்துவிடும்.  

நிறுவனத்திலிருந்து வெளியேற வசதியாக இப்போதே பணிவிலகல் கடிதத்தை எழுதி வைத்துவிட்டேன். எப்போது போதும் என தோன்றுகிறதோ அப்போது  கிளம்பிவிடுவேன். மனதில் ஏதோ சரியில்லை என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. ஏதோ.. என்னமோ...

அன்பரசு 

படம் - பின்டிரெஸ்ட் 




கருத்துகள்