இயற்கை வேளாண்மை பற்றிய தகவல்கள்!- அங்கீகாரம் பெற்ற மாநிலங்கள்

 









இயற்கை வேளாண்மை



2021-2022 காலகட்டத்தில் இயற்கை வேளாண்மைக்கான அங்கீகாரம் பெற்ற நிலப்பரப்பு 59 லட்சம் ஹெக்டேர்களாகும். 

இந்திய மாநிலங்களில் இயற்கை வேளாண்மையில் முன்னிலை வகிக்கும் மாநிலம், மத்தியப் பிரதேசமாகும். இதற்கடுத்து மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன. 

2016ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலம் தனது வேளாண் நிலப்பரப்பு முழுவதும் இயற்கை வேளாண்மைக்கென அங்கீகாரம் பெற்றுள்ளது. 

இந்தியாவில் இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தியான பொருட்களின் அளவு 3 கோடியே 50 லட்சம் மெட்ரிக் டன்களாக உள்ளது. இதைப்பற்றிய தகவலை வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேலாண்மை ஆணையம் (Apeda) தெரிவித்துள்ளது. 

மழைப்பொழிவு கொண்ட நாடுகள், இயற்கை வேளாண்மையை செய்யும்போது அவர்களுக்கு விளைச்சல் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் தொழில்மயமான நாடுகளில் உரப் பயன்பாடு அதிகம். எனவே, அந்நாடுகள் இயற்கை வேளாண்மைக்கு மாறும்போது பயிர் உற்பத்தி குறையும் என ஐ.நாவின்  உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (UN Food and Agriculture Organization) தகவல் தெரிவித்துள்ளது. 

TOI

image - wallpaper flare

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்