கொலைக்கரத்தால் தடுமாறும் ஜானி நீரோ, ஸ்டெல்லா - முத்து காமிக்ஸ்

 


அ.கொ.தீ.க.: முத்து ஸ்பெஷல்!


கொலைக்கரம் 

முத்து காமிக்ஸ் 



இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தேசப்பற்றுக் கதை. கதையில், பெரிய நினைத்து வியப்படையும் சண்டைக்காட்சிகள் ஏதும் கிடையாது. கதையில் ஆச்சரியப்படுத்துவது ஜானி நீரோ அல்லது ஸ்டெல்லா அல்ல. வில்லனான மைக்கேல்தான்.
அவரின் திறமைதான் கொலைக்கரம் என தலைப்பு வரக்காரணம். இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றுபவரின் கைகள் எஃகு போன்றவை. ஆயுதமே இல்லாமல் ஜெர்மன் படை வீர ர்களை கழுத்தை உடைத்து புகழ்பெற்றவர். நாட்டிற்காக இப்படி உழைத்தாலும் அவரது குடும்பத்தை அயர்லாந்து நாட்டிற்கு சுதந்திரம் கேட்டதற்காக இங்கிலாந்து அரசு சுட்டுக்கொல்கிறது. அவர்களின் செயல்பாடுகளை தேசதுரோகி என்ற ஒற்றை வார்த்தையில் பேசி முற்றுப்புள்ளி வைக்கிறது., இதனால் மைக்கேல் விரக்தி கொள்வதோடு, இங்கிலாந்தை பழிவாங்க முடிவு செய்கிறார். இதற்காக தக்க சமயத்திற்காக காத்திருக்கிறார். அப்படி ஒரு வாய்ப்பும் அவருக்கு கிடைக்கிறது.

அறிவியல் விஞ்ஞானி ஒருவர் மேக உடைப்பு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் கருவி ஒன்றை உரு வாக்கியிருக்கிறார். இந்த கருவி ஒரு நகரில் கூடும் அதிக மேகங்களை, மேக கூட்டங்களை கலைக்கும் திறன் கொண்டது. இதனால் நகரம் வெள்ள பாதிப்பிலிருந்து தப்பும். இதன் இன்னொரு மறுபக்கம், இக்கருவியை தவறாக கையாண்டால் நகருக்கு, நாட்டிற்கு கிடைக்கும் மழையை பெய்யாமல் தடுக்க முடியும். இந்த இரண்டாவது முறையை மைக்கேல் கையில் எடுக்க, இங்கிலாந்து தொழிலதிபரான ஜானி நீரோவை உளவு அமைப்புத் தலைவர் சந்தித்து பேசி காரியத்தை அவரது தலையில் கட்டுகிறார். ஜானி நீரோ, முன்பு உளவு அமைப்பில் இருந்தாலும் தற்போது அதை கைவிட்டு தொழிலதிபராக கரன்சி சேர்த்து தனது பிஏ ஸ்டெல்லாவோடு சம்சாரித்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இதில் ஜானி நீரோவுக்கான நாயகத்துவத்தை அனைத்தையும் ஸ்டெல்லாதான் செய்கிறார். அவர்தான் ஜானியை பலமுறை ஆபத்திலிருந்து காக்கிறார். ஜானி நீரோ இறுதிக்காட்சியிலும் கூட மைக்கேலின் கொலைக்கரத்தால் கும்மாங்குத்தாக வாங்கித் தள்ளுகிறா்ர். அப்போதும் ஸ்டெல்லா பற்றவைத்த நெருப்பு காரணமாகத்தான் மைக்கேல் பரலோக பிதாவைச் சந்திக்கிறார் கதை நிறைவு பெறுகிறது. இதில் ஜென்டர் நியூட்ரல் தீம் ஏதேனும் உண்டா என தெரியவில்லலை. ஜானியை அநியாயத்திற்கு டம்பி செய்துவிட்டனர். ஜானியை விட மைக்கேலைப் பற்றியும் அவரது மனதையும் அறிவதிலேயே படிக்கும் வாசகரின் மனம் செல்லும் என்பது ஒன்றும் ரகசியம் கிடையாது. அதுதான் இந்த காமிக்ஸ் கதையில் சற்றே ஆசுவாசம் அளிக்கிறது. அப்புறம் அந்த மேகத்தை விரட்டி கலைக்கும் கருவி. நல்ல ஐடியா. காலநிலை மாற்ற பாதிப்பு ஏற்படும் காலத்தில் சற்றே பழைய காமிக்ஸ் என்றாலும் சிந்தனையில் பல்லாண்டுகள் மேற்கு நாடுகள் முன்னேதான் உள்ளன என நிரூபிக்கிற மையப்பொருள் அற்புதம்.

கோமாளிமேடை டீம்






நன்றி - இரா.முருகானந்தம்

கருத்துகள்