நாய்களை எளிதாக பழக்க முடிவதற்கான காரணம்! - பதில் சொல்லுங்க ப்ரோ?

 














பதில் சொல்லுங்க ப்ரோ!

நாய்களை எளிதாக பழக்கமுடிவது எப்படி?

வீட்டில் வளர்க்கும் பூனைகளை குறிப்பிட்ட கட்டளைக்கு ஏற்ப பழக்கலாம். ஆனால், அந்த முயற்சியும் கூட நாய்களோடு ஒப்பீடு செய்தால் கடினமானவையே. நாய், உரிமையாளர் கூறும் சிக்கலான ஆணைகளை கூட ஏற்று செய்யும். ஆனால் பூனை, தானே விரும்பினால் மட்டும் செயல்களை செய்யும். நாய், பாரம்பரியமாக குழுவாகவே வேட்டையாடி வாழ்ந்து வந்துள்ளது. அப்படி வாழும்போது, குழுத்தலைவர் ஆணையை ஏற்று பணியாற்றும் பண்பு நாய்க்கு உண்டு. இதனால், நாய் தன் உரிமையாளரை தனக்கும் மேலுள்ள அதிகாரம் கொண்டவராக பார்ப்பதால் கட்டளையை உடனே செய்து முடிக்கிறது. எனவே, நாய்களை பழக்குவது எளிதாக இருக்கிறது. 

விஷ முறிவு மருந்து எப்படி உருவாக்கப்படுகிறது?

உலகம் முழுக்க 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஷப் பாம்புகள் உள்ளன. இவை மனிதர்களை கடிப்பதால் 80 ஆயிரம் தொடங்கி 1 லட்சத்து 40 ஆயிரம் வரை மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன.  பாம்பு கடித்தவரை உடனே காப்பாற்ற விஷ முறிவு மருந்து அவசியம். மருந்தைத் தயாரிக்க முதலில், பாம்பின் விஷத்தை குதிரையின் உடலில் செலுத்துகிறார்கள். இந்த விஷத்திற்கு எதிராக குதிரையின் உடல் ஆன்டிபாடிகளை, புரதங்களை  உருவாக்குகிறது. இதுவே பாம்பின் விஷத்திலிருந்து குதிரையின் உயிரைக் காக்கிறது. ஆய்வாளர்கள் குதிரையின் ரத்தத்தைப் பெற்று அதிலிருந்து ஆன்டிபாடிகளை தனியாகப் பிரித்து, விஷ முறிவு மருந்தை தயாரிக்கின்றனர். 


Science illustrated australia 2022


கருத்துகள்