தோல்பாவைக்கூத்து மூலம் பள்ளிகளில் விழிப்புணர்வுக்கல்வி! பிரவின்குமார் குழுவினரின் புதிய முயற்சி!

 

















சூழல் பிரசாரத்தை தோல்பாவைக்கூத்து மூலம் செய்யலாம்! 


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சூழல் ஆராய்ச்சியாளர், ஆர்.பிரவின் குமார். அண்மையில் தமிழக அரசு பிரவின் குமாரின் சூழல்பணிகளைப் பாராட்டி,  2021ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதை வழங்கியுள்ளது. 

பிரவின் குமார், பொம்மலாட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு காடுகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 2013ஆம் ஆண்டு தொடங்கி,  பள்ளிகளில் தனது குழுவினருடன் சேர்ந்து பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதுவரை பிரவின் குழுவினர், தமிழ்நாடு முழுக்க 150 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

 தனது நிகழ்ச்சி மூலம் உயிரினங்கள் பற்றிய அறிவையும், அதனை பாதுகாக்கும் அக்கறையையும் மாணவர்களுக்கு உணர்த்த உழைத்து வருகிறார் பிரவின் குமார்.  “முதலில் நாங்கள் பொம்மலாட்டத்தை பள்ளியில் நடத்தும்போது அமைதியாக மாணவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். ஒருமுறை திடீரென பச்சோந்தி பாத்திரம் நாடகத்தின் இடையே தோன்றி, நீங்கள் என்னைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்க வைத்தோம். சற்று நேரம் பேசாமல் இருந்த மாணவர்கள் அதனை வேட்டையாடுவோம் என ஒப்புக்கொண்டனர் . இதன்மூலம், விலங்குகளை வேட்டையாடும் பழக்கத்தை தவறு என உணர்த்த முடிந்தது” என்றார் சூழல் ஆராய்ச்சியாளர் பிரவின் குமார். 

குழந்தைகளுக்கு சூழல் சார்ந்த கல்வியை அளிக்க இரு காமிக்ஸ் புத்தகங்களை எழுதியுள்ளார். முள்ளுக்காட்டு இதிகாசம், அலங்குக்கு ஆபத்து  ஆகிய இரு நூல்களும் முள்ளெலி, எறும்புதின்னி  ஆகியவற்றைப் பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்துகின்றன.  பிரவின்குமார், கிழக்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் பாறை எலியைப் (Elvira rat) பாதுகாக்க எல்விரா பாதுகாப்பு  திட்டத்தை (ECI) செயல்படுத்தி வருகிறார்.   உயிரிவேதியியல் பட்டதாரியான பிரவின்குமார், தற்போது முனைவர் படிப்பை படித்துவருகிறார். 



the hero of small things

rohan premkumar

the hindu 19.6.2022

https://www.vikatan.com/news/general-news/a-photo-album-on-admk-general-body-meeting?pfrom=latest-infinite

https://www.thehindu.com/society/a-wildlife-researcher-uses-puppetry-to-spread-ecological-awareness/article65525929.ece

  https://www.natureinfocus.in/environment/quick-five-brawin-kumar

கருத்துகள்