அரசியல்வாதிகள், காவல்துறை கைகோப்பதால் ஐபிஎஸ் பதவியை கைவிட்டு மாஃபியா தலைவனாகும் நாயகன்!
காவல்நிலையம் சுரேஷ்கோபி, ஜோதிர்மயி மலையாளம் தயாசங்கர் என்ற எஸ்பி, கேரளத்திற்கு பணிபுரிய வருகிறார். அவருக்கு மனைவி, தம்பி ஆகியோர் உண்டு. காவல்துறை கமிஷனர், அரசியல்வாதிகள், மாஃபியா தலைவன் ஜிவி ஆகியோர் செய்யும் சூழ்ச்சியால் தம்பி கொல்லப்பட்டு தலை வேறு முண்டம் வேறாக ஆக்கப்படுகிறான். மனைவிக்கு முதுகு எலும்பில் அடிபட்டு சக்கர நாற்காலியில் வாழ்க்கை அமைகிறது. தயாசங்கர் ஜிவியை எப்படி பழிவாங்கினார் என்பதே கதை. படத்தின் தொடக்கத்தில் பாட்டாளி தோழன் என்ற ஒருவரை வில்லனாக காட்ட அரசியல்வாதிகள் முயல்கிறார்கள். அவருக்கு செல்வாக்கு பல பக்கம் இருப்பது போல தெரிகிறது. பல்வேறு சமூக சேவைகளை செய்கிறார். மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லம், பெண்கள் காப்பகம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். அவரை எதிர்த்து அரசியல்வாதிகள் செய்யும் சூழ்ச்சியால், போலீஸ் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொண்டு செல்லும் உணவுகளை கீழே கொட்டி சோதிக்கிறார்கள். ஆனால் எதுவும் காவல்துறை நினைத்தது போல நடப்பதில்லை. ஆயுதங்கள், போதைப்பொருள் என எதுவும் கிடைப்பதில்லை. காவல்துறை அதிகாரி குழம்பிப்போகிறார். அவரது காதலி, பாட்டாளி தோழன் நல்ல மனிதர் கெட்டவர் ...