இடுகைகள்

பாக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாலிபன்கள் பற்றிய சிறு குறிப்பு!

படம்
  தாலிபன்கள் சிறு குறிப்பு 1866 பிரிட்டிஷ் காலனி ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது, பல்வேறு மத, இன குழு மக்கள் கசக்கி பிழியப்பட்டு வந்தனர். முஸ்லீம் மக்களை இதிலிருந்து காப்பாற்றவென தனி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. பழமைவாத கொள்கைகளை தனது பின்னணியில் கொண்டு பிற இந்து, கிறிஸ்தவ அமைப்புகளை போல இயங்கியது. உத்தரப்பிரதேசத்தில் டியோபேண்ட் என்ற இடத்தில் அடிப்படைவாத முஸ்லீம் அமைப்பு தொடங்கப்பட்டது.  1919 தியோபேண்ட் முறையில் பல்வேறு மத நம்பிக்கையாளர்களும் பயிற்சி பெறத் தொடங்கினர். இவர், இந்திய சுதந்திரத்திற்காக போராடினர். பாகிஸ்தான் என்ற நாடு உருவாவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  1977 பாகிஸ்தானில் தியோபேண்ட் முறையில் பயிற்சி செய்தவர்கள் இருக்கிறார்கள் என தகவல் அறியப்பட்டது. அதிபர் முகமது ஜியா உல் ஹக் காலத்தில் அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.  1980 பாகிஸ்தானிய தியோபண்டி ஆட்கள், இஸ்லாமிய சட்டங்களை அதி தீவிரமாக கடைபிடிப்பவர்கள். இவர்கள்தான் ஆப்கானிய ராணுவம, காஷ்மீரில் தாக்குதல் நடத்துபவர்களாக மாறினர்.  சவுதி அரேபியா, ஷியா மக்கள் அதிகம் உள்ள இரான் நாட்டில் சன்னி மக்களைக் கொண்டு சுவர் ஒன

ஜாலி பிட்ஸ்! - இந்திய ரூபாய்களை சீல் வைத்து வைத்து பயன்படுத்திய பாக் அரசு

படம்
பிட்ஸ்! இந்தியாவில் 1954 முதல் 1978 ஆம்  ஆண்டுவரையிலான காலகட்டத்தில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட பணத்தாட்கள் புழக்கத்தில் இருந்தன.  சுதந்திரத்திற்கு பிறகு பாகிஸ்தான் அரசு, இந்திய ரூபாய்களில் பாகிஸ்தான் அரசு என்று சீல் வைத்து சில காலம் பயன்படுத்தியது.  ஒரு ரூபாய் நோட்டு மட்டும் நிதித்துறை செயலாளரின் கையொப்பத்தோடு வெளியாகிறது.  பத்து ரூபாய் மதிப்பிலான நாணயங்களைத் தயாரிக்க அரசுக்கு 6.10 ரூபாய் செலவாகிறது.  நாணயங்கள் அச்சிடும் இடங்களைக் கண்டறியும் விதமாக  டயமண்ட் (மும்பை), நட்சத்திரம் (ஹைதராபாத்), புள்ளி (நொய்டா) ஆகிய வடிவங்கள் பதிக்கப்படுகின்றன.  

பலுசிஸ்தானும் காஷ்மீரும் ஒன்று கிடையாது! - பஹூம்தாக் புக்தி

படம்
நேர்காணல் நவாப் பஹூம்தாக் புக்தி ஸ்வீடனில் உள்ள பலுசிஸ்தான் ரிபப்ளிக் கட்சித் தலைவர். இவர், 2006 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பலுசிஸ்தான் ஆளுநர் நவாப் அக்பர் புக்தியின் பேரன் ஆவார்.  பலுசிஸ்தானில் நிலைமை எப்படியிருக்கிறது? நிலைமை மோசமாக சென்று கொண்டிருக்கிறது. பாக். ராணுவம் அங்கு அரசியல் தலைவர்களை கைது செய்வதும், சித்திரவதை செய்வதும் இயல்பான விஷயங்களாகி உள்ளது. அவர்களையும் மக்களையும் விசாரணை என்ற பெயரில் அழைத்து மனித உரிமை மீறல்களை செய்வது அங்கு புதிய சட்டமாக மாறியிருக்கிறது. அங்கு கொல்லப்பட்ட, காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்.  தினசரி காணாமல் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு மேற்குலகைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள எவையும் அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் கூறும் தகவல்படி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எங்களுடைய அமைப்பின் ஆராய்ச்சிப்படி 20 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். அதில் எட்டாயிரம் பேர்களுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். இது