இடுகைகள்

கிரியேட்டிவிட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்திசாலித்தனத்தை அளவிடும் சோதனைகள்!

படம்
  சோறு தின்றுவிட்டு பற்களில் உள்ள துணுக்குகளை நீக்குவதற்கு பற்குச்சி உதவுகிறது. ஆனால் அதே குச்சியை வைத்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற கட்டுமானங்களை ஒருவர் உருவாக்கினால் அவரது புத்திசாலித்தனத்தை என்ன சொல்லுவீர்கள்? இ்ந்தியாவில் இதுபோன்ற விஷயங்களுக்கு பெரிய மதிப்பில்லை. மதம், சாதி, இனம் பார்த்து பாராட்டுவது இந்நாட்டின் தனிக்குணம். அயல்நாடுகளில் இதை ஏற்றுக்கொண்டு புதுமைத்திறன் என்கிறார்கள். அதை இனவெறி கடந்தும் பாராட்டுகிறார்கள். இப்படி மேதாவியாக யோசிப்பவரின் புத்திசாலித்திறனை அளக்க ஐக்யூ அளவீடுகள் கூட உண்டு. 1905ஆம் ஆண்டு வரை ஒருவரின் புத்திசாலித்தனத்தை அளவிட அளவீடு என்று ஒன்று உருவாக்கப்படவில்லை. பிரெஞ்சு உளவியலாளரான ஆல்பிரட் பைனட், தியோடர் சைமன் ஆகியோர் இணைந்து பைனட் சைமன் ஸ்கேல் என்ற அளவீட்டை உருவாக்குகிறார்கள். இதில் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை அளவிடும் அம்சங்கள் உள்ளன. நினைவுத்திறன், கவனம், பிரச்னையை தீர்க்கும் திறன் ஆகியவை கணக்கிடப்பட்டன.  இதில் தோராயமான ஐகியூ அளவீடு 100. அதிமேதாவி என்றால் 145. மற்றபடி பிறர், எழுபது முதல் 130க்குள் வருவார்கள். உலகில் மேதாவி என்பவர்களின் அ

ஹாபியை தேர்ந்தெடுத்து வளர்ப்பது எப்படி?

படம்
 பொழுதுபோக்கு பழக்கங்களை வளர்த்துக்கொள்வது எப்படி? சவால் தரும், வேடிக்கையான ஊக்கமூட்டும் பொழுதுபோக்கு பழக்கங்கள் என்னென்ன உங்களிடம் உள்ளன என்று கேட்டால் பலருக்கும் மனதில் கேள்விக்குறிதான் எழும். பலரும் டிவி பார்ப்பார்கள். ரேடியோ பார்ப்பார்கள். இன்ஸ்டாரீல்ஸ் பார்ப்பார்கள். இதில் ஹாபிக்கு எங்கே போவது? பொழுதுபோக்கு என்பது ஒருவருக்கு மன அழுத்தத்தை குறைக்கிறது. தூக்கம் வரவைக்கிறது. தன்னம்பிக்கையைக் கூட்டுகிறது. தன்னளவில் திருப்தியை அளிக்கிறது. மற்றபடி இதில் யாரையும் கவர, திருப்திபடுத்த வேண்டியதில்லை. வேறு உள்நோக்கங்களும் இல்லை. ஒரு கேக்கை சமையல்காரர் ஆர்வமுடன் உருவாக்கி அதை அலங்காரம் செய்து பார்ப்பது போலவே பொழுதுபோக்கு செயல்கள் இருக்கும். இதில் செய்யும் செயல்முறையே முக்கியம். பொழுதுபோக்குகளை ஆக்கப்பூர்வமாக எப்படி அமைத்துக்கொள்வது என்று பார்ப்போம்.  உங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி பொழுதுபோக்கு எப்படியிருக்கவேண்டுமென யாரும் கூறமாட்டார்கள். அதை செய்யப்போகும் நீங்கள்தான் பல்வேறு கேள்விகளை கேட்டு அதை கண்டறியவேண்டும். நான் செய்யும் செயல் என்னை நெகிழ்வாக வைத்திருக்கவேண்டுமா, கவனத்தை வேறுபக்க

கிரியேட்டிவிட்டி பற்றி சாதனையாளர்கள் கூறும் கருத்துகள்!

படம்
  கிரியேட்டிவிட்டி பற்றி பிரபலங்கள் கூறிய கருத்துகள்… உங்களின் உள்ளுணர்வை நம்புங்கள். நான் பிறர் கூறுவதை கவனமாக கேட்பேன். ஆனால் நாளின் இறுதியில், என்னுடைய   முடிவை   நானே தீர்மானிப்பேன். இப்படி செயல்படுவது, பின்னாளில் நீங்கள் உருவாக்காத முடிவுக்காக வருத்தப்படுவதை விட சிறந்ததுதான். -உடை வடிவமைப்பாளர் பீட்டர் டூ சில சமயங்களில் நமக்குள்ளிருந்து இயற்கையாக, வேகமாக வெளியே வரும் விஷயங்களை சிறந்த படைப்பு என கொள்ளலாம். அதுதான் உங்களுக்கு கிடைத்த பரிசு. அதை நம்புங்கள். -பத்திரிகையாளர் ஜோ ஹோல்டர் உங்களின் உள்ளுணர்வை நம்பி சவால்களை எதிர்கொள்ளுங்கள். அது அன்றைய சூழலுக்கு எதிராக கூட இருக்கலாம்.   பரவாயில்லை. நீங்கள் வேலை செய்யும் முறையைக் கவனியுங்கள். அங்குதான் உண்மையான மாயம் நடக்கிறது. வேலையின் முடிவை விட அதன் செயல்முறையில் கவனம் வைத்தால் நாம் இலக்கை நோக்கிய பயணத்தை விரைவில் அடையும் வழிகள் கிடைக்கும். -யூரி சோய், துணை நிறுவனர், சவில் ரோ டெய்லர் யூரி அண்ட் யூரி உங்கள் உள்ளுணர்வை ஓட்டியிருங்கள். நான் ஆராய்ச்சி செய்யும்போது சுதந்திரமாக அதை செய்யும்போதுதான் சிறப்பாக இயங்கியிருக்கிறேன்.

கிரியேட்டிவிட்டியை அடையாளம் காண்பது எப்படி? - சில அறிவுறுத்தல்கள்....

படம்
  புதுமைத்திறன் உலகம் கிரியேட்டிவிட்டியை உருவாக்கிட பிறருக்கு தெரியாத கலை வடிவம் ஏதும் கிடையாது என எழுத்தாளர் ரிக் ரூபின் கூறுகிறார். இவர் இதுபற்றி, தி கிரியேட்டிவ் ஆக்ட் – எ வே ஆஃப் பீயிங் என்ற நூலை எழுதியிருக்கிறார்.’’ நீங்கள் கிரியேட்டிவிட்டியை நாடகம் போல எடுத்துக்கொண்டு முன்னேறி செல்லுங்கள். நிஜ உலகைப் போலவே அனைத்து விஷயங்களையும் உருவாக்குங்கள். அது சிறியதாக அல்லது   வினோதமாக கூட இருக்கலாம். புதிய பரிசோதனை முயற்சிகளை செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் உருவாக்கியதை காட்ட நினைத்தால் உலகில் அதை வெளியிடலாம்.’’ என்பது இவரது கருத்து. தனி பார்வை ‘’உங்களுக்கென தனி பார்வையை உருவாக்கிக்கொள்ளுங்கள்’’ என ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் கூறுகிறார். இவர் 50 திரைப்படங்களைப் பார்த்து அதன் வழியாக தனக்கான கிரியேட்டிவிட்டி பாதையை உருவாக்கிக்கொண்டார். தன்னை வழிநடத்திய திரைப்படங்களாக எ பியூட்டிஃபுல் மைண்ட் தொடங்கி 1917 என்ற திரைப்படங்கள் வரை குறிப்பிடுகிறார்.’’யாரையும் நகல் செய்யாதீர்கள்’’ என்றும் குறிப்பிட மறக்கவில்லை. ஆற்றலின் பிரதிபலிப்பு ‘’நான் திரைப்படங்களுக்கான நடிகர்களை அடைய

சைக்கிள் கற்பது எப்போதும் மறப்பதில்லை, என்ன காரணம்? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
            பதில் சொல்லுங்க ப்ரோ ? சைக்கிள் கற்பது எளிதில் மறப்பது இல்லை ஏன் ? சைக்கிளை குரங்கு பெடல் போட்டு பலரின் இடுப்பின் மீது விட்டு கற்றவர்களுக்கு அது எப்படி எளிதில் மறக்கும் ? பலருக்கும் சைக்கிளை பழகி பல்லாண்டுகள் ஆனபிறகும் சைக்கிளை எப்படி ஓட்டுவது என்பது மறப்பது இல்லை . சைக்கிள் ஓட்டுவது பெரிய விஷயமாக பலருக்கும் தெரியாது . ஆனால் இதில் முழு உடலும் அலர்ட்டாக இருப்பது முக்கியம் . அப்போதுதான் மூளை நினைத்த விஷயங்களை உடல் செயல்படுத்த முடியும் . உடலின் மோட்டார் அமைப்பின் செயல்பாடு , தசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை நீங்கள் பெடல் போடும்போது சரியாக அமையவேண்டும் . இல்லையெனில் சைக்கிள் எங்காவது மோதி சரிந்துவிடும் . விளைவாக உங்கள் முட்டி பெயர்ந்து விடும் . மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் ஆய்வாளர் ஜூர்ஜென் கான்சாக் செரிபிரல் ஒருங்கிணைவு சைக்கிள் ஓட்டுதலை சாத்தியமாக்குகிறது என்று கூறுகிறார் . சைக்கிள் ஓட்டுவது மட்டுமல்லாது நடனம் , விளையாடுவது , நடப்பது ஆகியவை செய்யும்போதும் அவசியமாகிறது . இவை சரியாக இல்லாதபோது இந்த செயல்பாடு நடைபெறாது . வாழ்க்கை மு

போர்டு கேமில் கலக்கலாம் வாங்க!

படம்
போர்டு கேம் விளையாட்டில்  கற்றுக்கொள்ளவேண்டியது என்ன? இன்டோர் விளையாட்டுதான். ஆனால் அதிலும் பல்வேறு திறன்களைச் சொல்லித்தரத்தொடங்கியுள்ளன போர்டு கேம் விளையாட்டுகளுக்கான கஃபேக்கள். இதில் என்ன கற்றுக்கொள்ளலாம்? டெப்ட்ஸில்லா என்ற விளையாட்டு கடன் எப்படி வளருகிறது என்பதை விளையாடுபவர்களுக்கு விளக்குகிறது. கடன், வட்டி ஆகியவற்றினையும் தெளிவாக காட்டுகிறது. வட்டி எப்படி வளர்ந்து சிக்கலாக மாறுகிறது என்பதைக் காட்டுகிறது. டிவியில் கேம் ஆப் த்ரோன்ஸ் பீக்கில் இருக்கும்போது மயிலாப்பூரில் போர்ட் கேம்களுக்கான கபேயை மென்பொருள் பொறியாளர்கள் மூவர் இணைந்து தொடங்கியிருக்கின்றனர். வருண் தேவநாதன், ஸ்ரீராம் மகாலிங்கம், ஷ்ரவண் சந்தோஷ் ஆகியோர்தான் இந்த டிரெண்டை மயிலாப்பூரில் அமுல்படுத்தியிருப்பவர்கள். தொண்ணூறுகளில் உலகில் போர்டு கேம்களில் மாற்றம் தொடங்கியது. இதில் பல்வேறு ஐடியாக்களுடன் போர்டு கேம்கள் புதிதாக ஐரோப்பாவில் ரீஎன்ட்ரியாகி மக்களைக் கவர்ந்தன. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் இந்தியாவுக்கு வரும்போது கொண்டு வந்த போர்டு கேம்களில் செட்லர்ஸ் ஆப் கேட்டன், சிட்டாடெல், புவர்ட்டோ ரிகோ ஆகியவை