ஒரே நேரத்தில் மூன்று இளம்பெண்களை காதலிக்கும் ரோமியோ!
ரோமியோ மலையாளம் திலீப்,விமலா ராமன், சம்யுக்தா,ஹனீபா சாதி,மதம் மாறி மூன்று பெண்களை காதலிக்கும் ரோமியோ ஒருவரின் கதை. உண்மையில் வதந்தி நாளிதழில் வரும் செய்தியைப் போன்றதல்ல. இங்கு நாயகன் மனு கிருஷ்ணன், தனது வேலை, அதில் வரும் சம்பளத்தையே நம்பியிருக்கிறார். அதில் பிரச்னை வரும்போது, பெயர் மாற்றி, சாதி மாற்றிக்கொண்டு ஓரிடம் செல்கிறார். அங்கு வாழும் ஒரு அய்யங்கார் பெண்,சுப்பிரமணி என்ற பெயருடைய நாயகனை விரும்பத் தொடங்குகிறாள். ஏன் என்றால் அதற்கென அவளுக்கென சில காரணங்கள் உள்ளன. அவளுக்கென பார்த்த மாப்பிள்ளை குடிநோயாளி. சுப்பிரமணிதான் அவனுடைய பெயரும் கூட. நாயகன், அய்யங்கார் பெண்ணிடம் வாய்ப்பாட்டு கற்கவும் கூட முயல்கிறான். இப்படி சில விஷயங்கள் ஒற்றுமையாக இருக்க அந்தப்பெண் நாயகனை காதலிக்கத் தொடங்குகிறாள். ஆனால் நாயகன் அவளை காதலிப்பதில்லை.. அடுத்து, டிவி நிகழ்ச்சி பாடகியின் அப்பாவிடம், வாங்கிய காசை அடைப்பதற்காக பாடகியை மணக்க முடிவெடுக்கிறார் மனுகிருஷ்ணன். ஆனால் இந்த சமாச்சாரம் அந்தளவு எளிதாக இல்லை. பாடகியின் அப்பா, நாயகன் மனுவை மதம் மாறச் சொல்லி நிபந்தனை விதிக்கிறார். இதனா...