இடுகைகள்

தோட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாய கருவிகளை வடிவமைக்கும் விவசாயி!

படம்
  விவசாய கருவிகளால் புகழ்பெற்ற விவசாயி! கர்நாடகத்தின் தார்வாடிலுள்ள அன்னிகெரி கிராமத்தைச் சேர்ந்தவர், அப்துல் காதர் நாடாகட்டின். இவர், விவசாயிகளுக்கு பயன்படும் 24 விவசாய கருவிகளைக் கண்டுபிடித்துள்ளர். கிராமத்தில் சக விவசாயிகள் இக்கருவிகளைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரித்துள்ளனர்.    அப்துல்,  சிறுவயதிலிருந்தே புதுமையாக யோசித்து வருபவர். பள்ளி செல்லும்போது, அதிகாலையில் நேரமே எழ முடியாமல் தவித்தார். இதற்காக,  அலாரம் கடிகாரத்துடன் நீர் பாட்டிலை இணைத்து கருவியை உருவாக்கினார்.  அலாரம் ஒலிக்கும்போது, அதனை உடனே எழுந்து நிறுத்தாதபோது நீர்பாட்டிலிலுள்ள நீர் முகத்தில் கொட்டும். இப்படி ஒரு கருவியை அப்துல் கண்டுபிடித்தபோது அவரின் வயது 14 தான்.  இந்த நுட்பமான முறையில்தான் அதிகாலை எழுந்து படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி  பெற்றார்.  அப்போது அவரது குடும்பம் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் சிக்கியது. இதனால் விவசாய பட்டப்படிப்பு படிக்கும் கனவை கைவிட்டார். 1974ஆம் ஆண்டு முதல் குடும்பத்திற்கு சொந்தமான  60 ஏக்கர் நிலத்தில் வேளாண்மை செய்யத் தொடங்கினார். படிப்பைக் கைவிட்டாலும் கருவிகளை ஊக்கத்துடன் உருவாக்கி

டெக் புதுசு! - தோட்டப்பொருட்கள்

படம்
தோட்டப்பொருட்கள் தி ஸ்மார்ட் கார்டன் 3 வீட்டுத்தோட்டம் என்பது சூரியன் பதிப்பகத்தில் புத்தகம் போடுவதற்கு முன்பே உலகறிந்த ஒன்று. எனவே அதற்கான டெக் சமாச்சாரங்களும் வராவிட்டால் எப்படி? அதற்கு உதவுவதுதான் ஸ்மார்ட் கார்டன். இதில் மண், லைட் என அனைத்துமே உள்ளது. இதன்மூலம் லாவண்டர் பூ முதல் கீரை வரை விதைத்து ஜமாய்க்கலாம். அடுத்த வீட்டுக்காரரை பொறாமைப்பட வைக்கலாம். விலை - 110 டாலர்கள் கோ சன் கிரில் சாதாரணமாக பீச்சுக்கு சுண்டல் வாங்கிக்கொண்டு சேட்ஜி செல்வரார்கள். அங்கே தின்றுமுடித்து பிக்னிக் சந்தோஷம் பெற்று வருவார்கள். அதேதான். இப்போது நம்முறை கோசன் கிரில் சூரிய சக்தி மூலம் இயங்கும் கருவி. இதில் காய்கறிகளை அவிக்கலாம், சுடலாம். பேக்கரி சமோசாக்களை இதில் வைத்து சுடச்சுட சாப்பிடலாம். சோறு வைத்து பருப்பு குழம்பு வைக்க முடியுமா என்று கேட்காதீர்கள். லைட்டான தீனி தின்பவர்களுக்கான கருவி இது. விலை - 699 டாலர்கள் ஃபைனல் ஸ்ட்ரா பிளாஸ்டிக் ஸ்ட்ராதானே சூழலுக்கு பிரச்னை. வாக்கிங் ஸ்டிக்கை மடிப்பதைப் போல இப்போது மெட்டல் ஸ்ட்ரா சந்தைக்கு வந்துள்ளது. வாங்கிப்போட்டு உறிஞ்சிக் குட