நம்பிக்கை தரும் இளையோர் - பிளாஸ்டிக்கை எதிர்க்கும் நிஞ்சா சிறுமி மாத்வி சித்தூர்
நம்பிக்கை தரும் இளையோர் - பிளாஸ்டிக்கை எதிர்க்கும் நிஞ்சா சிறுமி மாத்வி சித்தூர் மாத்வி சித்தூரின் பெற்றோர்கள் சென்னையை பூர்விகமாக கொண்டவர்கள். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்கள். மாத்வி, தினசரி பயன்பாட்டுப் பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள் கலப்பை அறிந்தார். இதனால் ஏற்படும் நோய்கள், மண்ணுக்கு, நீருக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முயன்றார். இதற்காக கொலராடோவில் லிசா கட்டர் என்ற மக்களவை உறுப்பினரை சந்தித்து பேசி தனி மசோதாவை உருவாக்கி அதை சட்டமாக்குவதிலும் வெற்றிபெற்றிருக்கிறார். இதற்காக ஆளுநர் போலிசின் ஆதரவையும் பெற்றார். அவர், மாத்வியின் செயல்பாட்டை பாராட்டியதோடு, மசோதா சட்டமானபோது அந்த விழாவுக்கும் அழைத்து தனது பேனாவை பரிசாக கொடுத்து கௌரவித்திருக்கிறார். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நீங்கள் கூறும் புகார்களை ஏற்க மறுக்கிறார்களா, தயங்காதீர்கள். திரும்பத் திரும்ப அவர்களைக் கேட்டுக்கொண்டே இருங்கள் என்கிறார் மாத்வி. பிஎஃப்ஏஎஸ் எனும் வேதிப்பொருட்களால் இளையோருக்கு புற்றுநோய், மலட்டுத்தன்மை, நோய்எதிர்ப்பு சக்தி குறைவது, கெட்ட கொ...