விவாதம் நடத்தி மசோதாக்களை நடைமுறைப்படுத்தவே விரும்புகிறேன்! -ஓம் பிர்லா








ஓம் பிர்லா

மக்களை சபாநாயகர்

முன்னர் உங்களது பங்களிப்பால் மக்களைவில் உற்பத்தித்திறன் 100 சதவீதம் இருந்தது. ஆனால் குளிர்கால கூட்டத்தொடர் உற்பத்தித்திறன் 22 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. இதுபற்றி தங்கள் கருத்தென்ன?

கடந்த ஐந்து முறையாக கூட்டத்தொடர் சிறப்பாக நடைபெற்றது. எம்பிக்கள் தங்களு டைய கடமையை சரியாக நிறைவேற்றினர். மக்களவை அதிக பிரச்னையின்றி நடைபெற்றது. சில சமயங்களில் அவை நள்ளிரவு வரை கூட நடைபெற்றது. அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றபோதுதான் பெகாசஸ் பிரச்னை வெடித்தது. இதனால் எதிர்க்கட்சிகள் இதுபற்றி விவாதிக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட அமளியை சரிசெய்யவே முடியவில்லை. நான் என்னளவில் இப்பிரச்னையை சரிசெய்ய முயன்றேன். 

நாடாளுமன்றம், ஜனநாயக முறையில் நாட்டின் பிரச்னையை விவாதிக்கும் இடமாக மக்கள் கருதிவருகின்றனர். இது நேர்மறையான பிம்பத்தைக் கொண்டுள்ளது. பிற ஜனநாயக அமைப்புகளுக்கு முன்னோடியாக உள்ளது. 

இப்படி மக்களவை முடக்கப்பட யார் காரணம் என நினைக்கிறீர்கள்?

நான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு யாரை காரணம் சொல்லுவது? ஆளும் அரசு, எதிர்கட்சிகள் சில விஷயங்களில் ஒற்றுமை கொண்டால் மட்டுமே சபை நடக்கும். இதில் யார் ஒருவர் பிறரது கருத்தை மறுத்தாலும் சபை நடக்காது. சபையில் கத்துவது, வன்முறையில் ஈடுபடுவது ஆகியவற்றை நான் ஏற்பதில்லை. அனைத்து கட்சி தலைவர்களிடமும் இதுபற்றி பேசவிருக்கிறேன். இதனால் அனைத்து கட்சிகளும் நிலைமையை உணர்வார்கள் என நினைக்கிறேன். 

பெகாசஸ் காரணமாகவே அமளி உருவானது அல்லவா?

இது அரசுக்கும் , எதிர்கட்சிக்குமான விவாதம். சபாநாயகரான நான் அவையில் எந்த விவாதத்தையும் கூறமுடியாது. 

சபையில் விவாதம் நடக்காமல் ஏராளமான மசோதாக்கள் தாக்கலாகியுள்ளன. இதுதான் சபை நடைபெறும் சரியான முறையா?

விவாதம் நடைபெற்றபிறகு மசோதா தாக்கலாகி நடைமுறைக்கு வருவதையே நான் விரும்புகிறேன். ஆனால் சபை நினைத்தபடி சரிவர நடக்கவில்லை என்பதால் விவாதமின்றி மசோதாக்கள் தாக்கலாகி ஏற்கப்படுகின்றன. 

எதிர்க்கட்சிகள் பேசுவது லோக்சபா டிவியில் ஒளிபரப்ப படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

நாடாளுமன் ற விதிப்படி லோக்சபா டிவி செயல்படுகிறது. ஆளும் கட்சியினரை மட்டும் காட்டுங்கள், எதிர்க்கட்சியினர் பேசுவது காட்டாதீர்கள் என்று நான் கூறவில்லை. நாடாளுமன்ற அவை விதிப்படி பேசுபவர்களை லோக்சபா டிவியினர் காட்டுகிறார்கள். இதில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. டிவி குழுவினருக்கு நான் எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. 

அரசியலமைப்பு சட்டத்திற்கான புதிய மசோதா கூட விவாதம் இன்றி அமலாகிறது. இப்போதும் அவை அதற்கான விதியுடன் செயல்படுவதாக கூறுகிறீர்களா?

எங்களது வேலை, சபையில் விவாதம் நடத்தி மசோதாவை நடைமுறைக்கு கொண்டு வருவதுதான். ஆனால் சில சமயங்களில் இது நாம் நினைப்பது போல நடப்பதில்லை. விவாதம் நடக்காதபோது, அமைச்சர் மசோதாவை நடைமுறைப்படுத்த முயன்றால் எனது அனுமதியைக் கோரினால் வேறுவழியின்றி நான் அதை அனுமதிக்கிறேன். அவ்வளவேதான். 

ஹெச்டி 

சுபத்ரா சட்டர்ஜி











 


 


 

கருத்துகள்