சீரியல் கொலைகாரர்களுக்கு காதலிகள் கிடைப்பது எப்படி? சைக்கோ டைரி

 





காதலியும் மனைவியும்

சாலைகளில் அல்லது கடைகளில் பார்த்திருப்பீர்கள். பெண் பேரழகியாகவும், ஆண் நடுரோட்டில் உட்கார்ந்து பீடி கானா பாடி பீடி இழுப்பவர் போலவும் இருக்கிறாரே என்று. எப்படி இவர்கள் ஒன்றாக சேர்ந்தார்கள் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். சில கோணல் மனம் கொண்டவர்கள் அதனை கூச்சமே இல்லாமல் கேட்டும் தொலைத்து விடுவார்கள். 




உளவியல் ரீதியாக பெண்கள் தங்களால் தாங்கள் விரும்பிய ஆணை மாற்ற முடியும் என்று நம்புகிறார்கள். இதனால் டேட்டிங்கில் சில அறிகுறிகள் வெளிப்பட்டாலும் கூட அவனை மாற்ற முடியும். அவனுக்கு ஏதோ கஷ்ட காலம் இப்படி நடந்துகொள்கிறான் என நினைத்து வாழ்க்கைத் துணையாகிறார்கள். ஆக, இப்படி பெண்களின் கருணையால்தான் சீரியல் கொலைகாரர்களுக்கு நெடு ஆண்டுகள் தனிமை தொலைந்து இல்லறம் கைகூடுகிறது. ஆனாலும் கூட சீரியல் கொலைகாரர்கள் வீட்டில் வைத்துள்ள மார்பகங்களை வைத்து உருவாக்கி பேப்பர் வெயிட், குளிர்பதனப் பெட்டியில் வைத்துள்ள பெண்களின் வெட்டி பாதங்கள் ஆகியவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடையாமல் குடும்ப வாழ்க்கையை நடத்த வேண்டும். 

இப்படி வாழும் பெண்களுக்கு தெரியாமல் கொலைகளை, வல்லுறவு செய்கிறவர்களை பற்றி முன்னமே அசுரகுலத்தில் எழுதியுள்ளோம். 

மதுவும் போதைப் பொருட்களும்

இந்தியாவில் எப்படி தவறு செய்துவிட்டு கோவிலுக்கு சென்று அன்னதானம் வழங்கி பாவத்திற்கு பரிகாரம் செய்கிறார்களோ அதேபோல்தான் வெளிநாட்டிலும்.... அங்கு  கொலை செய்துவிட்டு பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்பது, அறக்கட்டளை நிகழ்ச்சிகளுக்கு தன்னார்வலராக பணியாற்றுவது ஆகியவற்றைக்கூட  சீரியல் கொலைகாரர்கள் செய்கிறார்கள். ஆனால் மது, போதைப்பொருட்களை பயன்படுத்துவதால்தான் கொலை செய்வதற்கான தைரியத்தைப் பெறுகிறார்கள் என்று கூறமுடியாது. ஜேக் டேனியல் தைரியத்தை தருவதை விட மறக்க நினைப்பதை மீண்டும் நினைவுபடுத்தவே செய்கிறது. இதன் ஆற்றல் கொஞ்சம் தைரியத்தை தருகிறது என்றாலும் கூட அது தற்காலிகம்தான். செய்த செயல் பற்றிய குற்றவுணர்வு அனைவருக்குமே உண்டு. 

சீரியல் கொலைகார ர்களுக்கு போதை என்பது குற்றம் செய்வதுதான். அதுதான் சிறுவயதில் தொடங்கி அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. அதனை அதிகரிக்க நினைத்துதான் கொலைகளை குறிப்பிட்ட இடைவெளியில் செய்கிறார்கள். பிறகு அதன் கால இடைவெளியை குறைத்து கொலையின் தீவிரத்தை கூட்டி இரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறார்கள். இதுவே அவர்கள் மாட்டிக்கொள்ள காரணமாக அமைகிறது. மது, போதைப்பொருட்களை வாங்க சிலர் திருடலாம். ஆனால் கொலை செய்வது என்பது பிறரின் கற்பனைதான். குடிநோய்க்கு அடிமையானவருக்கும் கொலை என்பது பெரிய விஷயம் என்பது தெரியும். 


பாட் ப்ரௌன்




கருத்துகள்