எட்டு முறையீட்டு ஆணையங்களை மூடுகிறது மத்திய அரசு! - வழக்குகள் என்னவாகும்?

 






மத்திய அரசு விரைவில் எட்டு புகார் முறையீட்டு ஆணையங்களை மூடவிருக்கிறது. இதற்கு இந்த ஆணையத்தில் போதுமான பணியாளர்கள் இல்லை என்று காரணம் கூறியிருக்கிறது. இதில் நடந்து வரும் வழக்குகள் என்னவாகப்போகிறது என யாருக்கும் தெரியவில்லை. திரைப்பட சான்றிதழ் முறையீட்டு ஆணையம், அறிவுசார் காப்புரிமை முறையீட்டு ஆணையம், சேவை வரி தொடர்பான முறையீட்டு ஆணையம், விமானத்துறை முறையீட்டு ஆணையம், தேசிய நெடுஞ்சாலை முறையீட்டு ஆணையம் ஆகியவை இதில் உள்ளடங்கும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபது என்வி ரமணா இதுபற்றி அரசிடம் கேள்வி கேட்டுள்ளார். 

2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள முறையீட்டு ஆணைய சீர்திருத்த மசோதா எட்டு ஆணையங்களை கலைக்க உள்ளது. இதில் உள்ள வழக்குகள் எல்லாம் அப்படியே குடிமை நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட உள்ளது. இந்த மசோதாவை ஆகஸ்ட் 3 அன்று நிதியமைச்சர் நிர்மலா மக்களவையில் தாக்கல் செய்தார். ஆணையத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மூன்று மாத சம்பளம் கொடுக்கப்பட்டு அவர்களை பணியிலிருந்து நீக்குவது அரசின் திட்டமாக உள்ளது. 

இந்தியாவில் தற்போது பதினாறு ஆணையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக இவற்றைக் கண்காணித்ததில் புகார்களை தீர்ப்பதில் பெரிய முன்னேற்றம் இல்லை என்று கூறியுள்ளது. இதனால் இவற்றைக் கலைக்கும் முடிவை எடுத்துள்ளது. 

உயர்நீதிமன்றங்களுக்கு வழக்குகள் மாற்றப்படுவது சிறந்த விஷயம்தான். ஆனால் முறையீட்டு ஆணையங்களுக்கு வரும் வழக்குகளுக்கும் உயர்நீதிமன்றம் சந்திக்கும் வழக்குகளுக்கும் வேறுபாடு உண்டு. சினிமா சார்ந்த அனுபவம், ரசனை இல்லாதவர்கள் அதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளிக்கும் கோமாளித்தனங்கள் விரைவில் நடக்கும் என திரையுலகினர் விமர்சித்து வருகின்றனர். 

அபூர்வா விஸ்வநாத்

இந்தியன் எக்ஸ்பிரஸ் 



கருத்துகள்