கண்ட்ரோல் + டெலிட் அழித்து கடந்த காலத்தை கூகுளில் அழிக்க முடியுமா? - ஒரு அலசல்
கூகுளில் கடந்த காலத்தை மறைப்பது எப்படி?
காவல்துறையில் ஒருவர் பிடிபட்டு குற்றம் சாட்டப்பட்டால் அது தினகரன், தினத்தந்தி என அனைத்திலும் செய்தியாகும். ஆனால் அவர் அக்குற்றச்சாட்டு தவறானது என்றால் அப்படி அவர் விடுவிக்கப்பட்டார் என்று எந்த செய்தியும் பிரசுரமாகாது. இன்று டிஜிட்டல் உலகிலும் அதே நிலைதான் உள்ளது. இதில் ஒரு மாற்றம் உள்ளது. ஒருவர் தவறுசெய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்துவிட்டு பழைய வாழ்க்கையை வாழ நினைத்தாலும் அது முடியாது. காரணம், வேலை தேடி நிறுவனத்திற்கு சென்றால் அவரைப் பற்றிய பின்னணியைத் தேடும்போது எதிர்மறையான செய்திகளை கூகுள் எளிதாக காட்டிக்கொடுக்கிறது.
இப்படி கூகுள் அத்தனை விஷயங்களையும் தனது சர்வரில் தேக்கி வைத்திருப்பதால், குற்றங்களை மறந்த அமைதியாக வாழ நினைப்பவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பே கிடைப்பதில்லை. கடந்தகாலம் என்பது காலைப்பிடித்த உடும்பாக தடுக்க புதிய வாழ்க்கையை தொடங்க முடியாமல் பலரும் தடுமாறி வருகிறார்கள். இதில் இன்னொரு ஆபத்தும் உள்ளது.
குழந்தைகளை பாலியல் சீண்டல், வல்லுறவு, கொலை செய்தவர்களைப் பற்றியும் கூட தகவல்கள் இணையத்தில் உள்ளன. இதனை நீக்கிவிட்டால் அவரைப்பற்றி பிறருக்கு எப்படி தெரியும். இதில் பொதுமக்களின் நலனும்தான் உள்ளது. அதனை எப்படி விட்டுக்கொடுக்க முடியும் என மறுதரப்பு தங்களது கருத்தை கூறுகிறது.
இந்திய அரசு 2019ஆம் ஆண்டு தனிப்பட்ட தகவல் பாதுகாக்கும் சட்டம் ஒன்றைக் கொண்டு வர நினைத்தது. அது இன்னும் சட்டமாகவில்லை. இதில் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்களது தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் இல்லாமல் செய்ய முடியும். அதாவது, கூகுள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களிடம் தங்களது தகவல்களை நீக்கிவிட கோரலாம். இப்போதைக்கு ரைட் டு பி ஃபார்காட்டன் எனும் விதிப்படி ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை இணையத்திலிருந்து நீக்க முடியும். இதற்கும் கூட ஒருவர் நீதிமன்றம் செல்வது அவசியம்.
இந்த விதி பற்றி பார்ப்போம்.
தனிப்பட்ட தகவல்களை இன்னோருவர் பார்க்க முடியாதபடி அமைப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.
தகவல் பாதுகாக்கும், பிறருக்கு தெரியாமல் மறைக்கும் கான்செப்ட், ஐரோப்பாவில் உருவானது. 2014ஆம்ஆண்டு பொதுதகவல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதனை ஐரோப்பிய நீதிமன்றம் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தது. 2019ஆம் ஆண்டு இந்த சட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கு என்ற மாற்றப்பட்டது.
மேற்கூறிய தகவல் பாதுகாப்பு சட்டப்படி ஸ்பெயின் நாட்டு குடிமகன் ஒருவர் வங்கி கடனை கட்டாமல் திவால் தோட்டீஸ் கொடுத்தார். அதுபற்றிய செய்திகள் கூகுள் வழியாக இணையத்தில் வந்துவிட்டது. பின்னாளில் வங்கிக்கடனை அவர் திருப்பிக் கொடுத்தபிறகும் இணைய செய்திகள் மாறவில்லை. தகவல் பாதுகாப்பு சட்டத்தை சுட்டிக்காட்டி அதனை நீக்க கூகுளிடம் வலியுறுத்தி குடிமகன் வென்றுள்ளார்.
2014 – 2020 காலகட்டத்தில் கூகுள் நிறுவனத்திற்கு ஒன்பது லட்சம் கோரிக்கைகள் குறிப்பிட்ட இணையதளத்தை நீக்குவதற்கு வந்துள்ளன.
ரைட் டு பி ஃபார்காட்டன் சட்டம் அர்ஜென்டினா, பிலிப்பைன்ஸ், தென்கொரியாவில் அமலில் உள்ளது. இந்தியாவில் இதனை நீதிமன்ற நீதிபதிகள் சிலர் மட்டுமே ஏற்கின்றனர். சிலர் இதனை ஏற்பதில்லை என்பது தீர்ப்புகளில் தெரிகிறது.
ஒடிஷா நீதிமன்றம், இணையத்தில் பொது இணையத்தளத்தில் ஒரு தகவல் வெளிவந்துவிட்டதால் அது பற்பசை போன்றது. டியூப்பை விட்டு பற்பசை வெளியே வந்துவிட்டால் அதனை உள்ளே செலுத்த முடியாது. செய்திகளும் அப்படித்தான் அதனை ஒன்றும் செய்யமுடியாது என்று தீர்ப்பில் கூறியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா
ஹிமான்சி தவான்
கருத்துகள்
கருத்துரையிடுக