இந்தியாவின் அடையாளங்கள் பற்றி அறிந்துகொள்வோம்!

 







இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தை கடந்து வந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் நிறைய மாற்றங்களை இந்தியா சந்தித்துள்ளது. பல்வேறு சோகமான சம்பவங்களையும், மகிழ்ச்சியான நினைவுகளையும் நாம் பார்த்துள்ளோம். இந்தியாவின் அடையாளங்கள் என்றால் நமக்கு என்ன நினைவுக்கு வருகிறது. கொடி, சிங்கம் ஆகியவைதானே அவை பற்றிய விஷயங்களைப் பார்ப்போம். 

இந்திய அரசின் சின்னமான மூன்று சிங்கங்கள் கொண்ட முத்திரை நாணயம், பணம், பாஸ்போர்ட், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அனைத்திலும் பதியவைக்கப்படுகிறது. 1875ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜி தேசியகீதமான வந்தே மாதரம் பாடலை உருவாக்கினார். சிங்க சின்னம் என்பது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிங்கம் அதிகாரப்பூர்வ அரசு சின்னமாக இருந்தாலும் தேசிய விலங்கு என்பது புலியாக உள்ளது. 

தேசியக்கொடி 

1947ஆம்ஆண்டு ஜூலை 22 அன்று, அரசியலமைப்பு ஹாலில் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரதமராக பதவியேற்க உள்ள நேரு ஆகியோர் தேசியக்கொடியை தீர்மானிக்க கூடியிருந்தனர். நேரு, தேசியக்கொடியின் நிறம், சர்கா ஆகியவற்றை எப்படி இருக்கவேண்டும் என கூறியிருந்தார். 1906ஆம் ஆண்டு சுயராஜ்ய கொடியை அறிமுகப்படுத்தியிருந்தனர். 1922ஆம்ஆ ண்டு ஜபல்பூரில் காங்கிரஸ் கட்சி சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய நிறங்களைக் கொண்ட தேசியக்கொடியை உருவாக்கி வெளியிட்டிருந்தது. இந்தக்கொடியில் ராட்டையை இருக்குமாறு செய்தது காந்தியின் ஐடியா.  நேரு தேசியக்கொடியை பட்டு மற்றும் காதி துணியில் உருவாக்கியிருந்தார். பல்லாண்டுகால இந்தியாவின் பெருமை, வரலாறு, உத்வேகம் ஆகியவற்றை  வெளிப்படுத்துமாறு தேசியக்கொடி இருக்கவேண்டும். மதம் சார்ந்து, இனக்குழு சார்ந்து தேசியக்கொடி இருக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தார். 

தேசியக்கொடியை தனிமனிதர்களும் , நிறுவனங்களும் பயன்படுத்துவதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதற்காக 2002 மற்றும் 2004இல் தனி சட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. இதன்படி தேசியக்கொடியை அவமானப்படுத்துவது போல நடந்தால் அவர்கள் மேல் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 




சிங்க முத்திரை

மௌரிய அரசரான அசோகரிடமிருந்து பெற்றதுதான் சிங்க முத்திரை. இதில் மூன்று சிங்கங்கள் வெளியே தெரியும். நான்காவது சிங்கம் மறைவாக பின்புறம் இருக்கும். அதன்கீழே யானை, குதிரை, காளை ஆகியவை இடம்பெற்றுள்ளன. கூடுதலாக புத்தரின் சக்கரம் ஒன்றும் உள்ளது. 1950ஆம்ஆண்டு ஜனவரி 26 அன்று இந்த சிங்க முத்திரை அரசால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. இந்த முத்திரையின் கீழே முண்டாக உபநிஷத்திலிருந்து எடுத்த சத்தியமேவ ஜயதே என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சாரநாத் அருங்காட்சியகத்தில் சிங்கம் ஏழு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கம் நம்பிக்கை, தைரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. குதிரை, காளை ஆகியவை கடின உழைப்பை அடையாளப்படுத்துகின்றன. சிங்க முத்திரை, சமூகநீதியை அடையாளப்படுத்துவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 




ரூபாய் அடையாளம் 

2009ஆம்ஆண்டு நிதித்துறை நாடு தழுவிய போட்டி ஒன்றை நடத்தியது. ரூபாய்க்கான அடையாளத்தை உருவாக்குவதுதான் போட்டி. 2007ஆம் ஆண்டு இந்தியா ஒரு டிரில்லியன் என்ற  மைல்கல்லை எட்டியது. தற்போது 3 டிரில்லியன் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.  போட்டிக்கு மொத்தம் 4 ஆயிரம் வடிவமைப்புகள் வந்தன. அதில் ஐஐடி குவகாத்தியின் வடிவமைப்பு துறை தலைவர்  உதயகுமார் வடிவமைத்த ரூபாய் அடையாளம் ஏற்கப்பட்டது. இதில் ரோமானிய, தேவநாகரி எழுத்துகளின் கலப்பு இருந்தது. 

ஹெச்டி

ஸாரோ முராவோ, தாமினி ரத்னம்



 



கருத்துகள்