பெருந்தொற்று விபரீதம்-அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்
வறுமையால் நடைபெறும் குழந்தை திருமணங்கள்!
கொரோனா காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கிவிட்டன. இதனால் நகர்ப்புறம் கிராம ம் என வேறுபாடின்றி வறுமை தாண்டவமாடுகிறது. நகரங்களில் வறுமை காரணமாக நடைபெறும் குழந்தை திருமணங்கள் இப்போது அதிகரித்து வருகின்றன. 2019 ஆம் ஆண்டை விட 2020ஆம் ஆண்டில் 45 சதவீதம் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன. 2,209 குழந்தை திருமணங்கள் 2019இல் நடந்துள்ளன. அடுத்த ஆண்டில் 3208 திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
எதற்காக குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன?
பெருந்தொற்றால் பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. வறுமை மற்றும் வேலை இழப்பால் குழந்தைகளை சுமையாக நினைக்கிறார்கள்.
பள்ளி மூடப்பட்டிருப்பது மற்றொரு முக்கிய காரணம்.
பெருந்தொற்றில் திருமணம் செய்வது சிக்கனமானது என பலரும் நினைக்கிறார்கள்.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என பெற்றோர் நினைக்கிறார்கள்.
எப்படி இவர்களை காப்பாற்றுவது?
பள்ளிகளை உடனே திறப்பது முக்கியமானது.
பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்களை அறிவிப்பது.
வார்டு அளவில் கிராம ம் நகரம் என அனைத்து இடங்களிலும் பெண் குழந்தைகளை பாதுகாக்க ஏற்பாடுகளை செய்வது
மாவட்ட அளவில் குழந்தை திருமணங்களை தடுக்க சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது
சிறுவீட்டில் குடியிருப்பவர்களான தொழிலாளிகள், பெண் குழந்தைகளை பாதுகாக்க பயப்படுகின்றனர். எனவே சிறுவயதில் அவர்களை திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றனர் என்றார் குழந்தைகள் நல செயல்பாட்டாளரான தேவநேயன்.
பள்ளி திறக்கப்படாத்தால் பெண் குழந்தைகள் வீட்டில்தான் போனைப் பார்த்தபடி இருக்கிறார்கள். இதனால் பெற்றோர், அவர்கள் வேறு சாதியில திருமணம் செய்துகொண்டு விடுவார்களோ என்று திருமணம் செய்து வைப்பதும் அதிகரித்துள்ளது என்றார் சைல்ட் வாட்ச் அமைப்பின் தலைவரான ஆண்ட்ரூ சேசுராஜ்.
குழந்தை திருமணங்களை நிறுத்தினால் மட்டும் போதாது. அவர்களின் குடும்பங்களுக்கு வாழ வழி காட்டுவதும் முக்கியம். அப்போதுதான் பெண்குழந்தைகளை பாதுகாக்க முடியும் என்கிறார் யுனிசெப்பில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பணியாற்றி முன்னாள் பணியாளரான ஆர். வித்யாசாகர்.
சென்னை, திருவள்ளூர், சேலம், கோவை, சேலம், காஞ்சிபுரம், திருச்சி, திருநெல்வே்லி ஆகிய நகரங்களில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன. குழந்தையிலேயே திருமணம் செய்தால் டௌரி குறைவாக கேட்கப்படுவதோடு, மாப்பிள்ளை வீடே செலவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
டைம்ஸ் ஆ்ப் இந்தியா
ரகுராமன்
கருத்துகள்
கருத்துரையிடுக