இந்திய மேப்பில் அட்டகாசமான இன்போகிராபிக் தகவல்கள்! - ஆச்சரியப்படுத்தும் இளைஞர்!

 






ஆல் இன் ஆல் மேப்- கேள்விகள் அனைத்துக்கும் விடை உண்டு!


இந்தியாவில் எத்தனை பேர் சைவ உணவு சாப்பிடுகிறார்கள், எத்தனை கேஎப்சி உணவுக்கடைகள் உள்ளன,  ஒருவரை அண்ணா என இந்தியில் அழைப்பவர்கள் எத்தனை பேர் என பல்வேறு கேள்விகளை நமக்கு கேட்கத் தோன்றும். ஆனால் இதற்கான விடைகளை மேப் வடிவில் கொடுத்தால் எப்படியிருக்கும்?



இந்தியாவில் சைவம் சாப்பிடுபவர்கள் அதிகமாக இருப்பது போல பிம்பம் உருவாக்கப்பட்டாலும், அசைவம் சாப்பிடுபவர்களின் சதவீதம் 80ஆக உள்ளது. பொதுவாக மாநில மக்களின் சாப்பாட்டு பழக்கத்தை பார்த்தால், பஞ்சாபியர்கள் இறைச்சியை அதிகம் சாப்பிடுகிறார்கள் என்பதும், தென்னிந்தியர்கள் குறைவாக சாப்பிடுகிறார்கள் என்பதும் தெரிய வரும். இதை மேப்பாக பார்க்க என்ன செய்வது? இந்தியா டுடே இன்போகிராபிக்ஸ் போடுவதற்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை. மென்பொருள் வல்லுநரான அஸ்ரிஸ் சௌத்ரியிடம் சொன்னால் போதும். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைவ உணவு சாப்பிடுபவர்கள், அசைவ உணவு சாப்பிடுபவர்கள் என தனித்தனியாக பிரித்து காட்டுகிறார். இதற்கு மத்திய அரசு வெளியிட்ட 2014ஆம் ஆண்டு அறிக்கைகளையும் படங்களையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். 



அதிகம் சைவ உணவுகளை சாப்பிடும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடம் பிடிக்கிறது. அடுத்து ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இடம்பிடிக்கின்றன. லட்சத்தீவுகள், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காய்கறி சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை 3 சதவீத த்திற்கும் குறைவுதான். 2019ஆம் ஆண்டிலிருந்து இந்தியாஇன் பிக்ஸல் என்ற இன்ஸ்டாகிராம் என்ற கணக்கில் தனது வரைபடங்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு பெரும்பாலும் இந்தியாவின்  அரசியல் பிரிவு வரைபடங்களைப் பயன்படுத்துகிறார். இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூட்யூப் ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வரைபடங்களை பதிவிடுகிறார். 



ஐஐடி காரக்பூரில் கட்டுமானக்கலை படிப்பை படிக்கும் அஸ்ரிஸ், இதற்கு முன்னரே எம்ஐடியில் மீடியா லேபில் படித்துள்ளார். வடிவமைப்பாளராகவும், கட்டுமானக்கலைக்குமான பயிற்சியும்தான் என்ன மேம்படுத்தியிருக்கிறது என்றார் மகேந்திரா. பாவு, பாஜி, அண்ணா, சேட்டா, பியா, அன்னய்யா, அடோபாவோ, ஆயு, காபு என அழைப்பதன் பொருள் தெரியுமா? இவை அனைத்துமே சகோதரர் என்ற உறவைக் குறிப்பதுதான். 

 



ஹெச்டி

நடாஷா ரெகோ


கருத்துகள்