சுதந்திரமான விலை நிர்ணய முறையால் தனியார் மருத்துவமனைகள் சாதித்தது என்ன?

 






தடுப்பூசிகளை செலுத்துவதில் தனியார் மருத்துவமனைகள்  என்ன செய்தார்கள்?




கோவிட் 19 பிரச்னையைப் பொறுத்தவரை அரசு, அனைத்து பொறுப்புகளையும் தனியார் நிறுவனங்களுக்கு கையளித்துவிட்டது என்றே கூறலாம். மக்கள் இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள  அரசை விட தனியாரையே நம்பலாம் என்றளவு தடுப்பூசி தட்டுப்பாடு அரசு வட்டாரங்களில் உள்ளது. மொத்த தடுப்பூசி திட்டத்தில் 25 சதவீதம் தனியார்  துறையினரை நம்பியே உள்ளது. இந்தியாவில் தொற்றுநோய் பரவலை அரசு மருத்துவமனைகள் பல்வேறுசவால்கள் இருந்தாலும் கூட சிறப்பாக சமாளித்து வருகின்றன. நோய் பரவி வரும்போபோது தடாலடியாக மருத்துவமனைகளை அடைத்த தனியார் நிர்வாகத்தினர், தடுப்பூசிகளை போடும் திட்டங்களை தங்களது வணிக லாபத்திற்காக அறிவித்து வருகின்றனர். 

தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்கி மாநில அரசுகளுக்கு மாறுபட்ட விலைகளில் விற்கிறது. இதற்கான விலை நிர்ணயம் என்பது மாறுபட்டுக்கொண்டே உள்ளது. இந்தியாவில் நாற்பது ஆண்டுகளாக தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் திட்டம் அமலில் உள்ளது. இதில் கூட தனியாரின் பங்களிப்பு பெரிதாக அதிகரிக்கவில்லை. பத்து முதல் பதினைந்து சதவீதத்தை இன்னும் தாண்டவில்லை. மூளைக்காய்ச்சல், போலியோ, அம்மை ஆகியவற்றிலும் கூட தனியார் துறையினர் பெரிய நம்பிக்கை தரும்படி செயல்படவில்லை.  சுதந்திரமான முறையில் தடுப்பூசிகளை விலை நிர்ணயம் செய்யச்சொல்லி மத்திய அரசு கூறியதால், நான்கு முதல் ஒன்பது மடங்கு வரை விலையேற்றம் விலை வைத்து விற்கப்பட்டிருக்கிறது. இதனால் உயிர் பிழைக்க மக்கள் தங்கள் சேமிப்பை பணயம் வைத்தேனும் தடுப்பூசிகளை வாங்கி செலுத்தி வருகிறார்கள். இதற்கான தொகை, மத்திய அரசு தடுப்பூசிகளை வாங்கியதற்கான விலையை விட இது அதிகம். 

25 சதவீதம் தடுப்பூசிகளை  தனியார் துறை செலுத்துவதற்கான அனுமதி பெற்றிருந்தாலும் செயல்பாட்டில் கோட்டைவிட்டு விட்டனர். மொத்த தடுப்பூசி திட்டத்தில் 7 சதவீதம் மட்டுமே  இவர்களின் பங்கு. பிற அனைத்துமே அரசு மருத்துவமனைகள் செய்த சாதனைகளே அதிகம்.  இந்த விவகாரத்தில் அரசின் கொள்கை மற்றும் அதனை விநியோகிக்கும் முறை படுதோல்வி அடைந்துள்ளது என்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. 

தி இந்து ஆங்கிலம்

சந்திரகாந்த் லகாரியா


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்