மதக்கலவர, பேரிடர் சூழலில் உங்களை தற்காத்துக்கொள்வதே முக்கியம்!
உலகளவில் வல்லுறவு, கொலை, கொள்ளை வழக்குகளில் அதிகம் பாதிக்கப்படும் நபர்களாக பெண்களே உள்ளனர். எழுபத்து மூன்று சதவீதம். தற்காப்புக்கலையில் பெல்ட்டுகள் வாங்கித்தள்ளாவிட்டாலும் அடிப்படையாக சில முறைகளைக் கற்றுக்கொண்டால் நல்லதுதான். மதவாத நாடான இந்தியாவில் தலித்துகள் திருமணத்தின்போது கூட தாக்கப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத இயக்கத்தின் கீழ் ஏராளமான சகோதர குண்டர்கள் அமைப்பு உண்டு. இவர்கள் வேலையே தாழ்த்தப்பட்டவர்களை, சிறுபான்மையினரை தாக்கி சொத்தை கொள்ளையடிப்பதுதான். எனவே, தற்காப்புக்கலை கற்பது ஏழை நாட்டில் மட்டுமல்ல வளர்ந்த நாட்டிலும் நல்ல விஷயம்தான். உயிர்பிழைக்க சண்டைபோடும்போது ஆயுதம் என தனியாக பிரித்துச் சொல்ல ஏதுமில்லை, அனைத்துமே ஆயுதங்கள்தான். கல், மண், குச்சி, செங்கல், ஆணி, சுத்தி, என அனைத்தையும் பயன்படுத்தலாம். உடலையும் ஆயுதமாக பயன்படுத்தலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். கைகளை வைத்து ஒருவரை முதுகில் முன்புறமாக மார்பில் வைத்து பின்புறமாக எப்படி வேண்டுமானாலும் தள்ளலாம். உங்கள் ஆற்றலைப் பொறுத்து எதிரிக்கு மார்பு எலும்புகள் கூட உடையும். கையிலுள்ள மூட்டு காயமடையாமல் இருந்தால...