அச்சுறுத்தலுக்கு உள்ளாகி தங்களுக்கான சினிமாவை தாங்களே உருவாக்கிக் கொள்ள முயலும் சிறுபான்மையினர்!
தங்களுக்கான சினிமாவை தாங்களே உருவாக்கிக் கொள்ள முயலும் சிறுபான்மையினர்!
இன்று இந்தி மொழி திரைப்படங்களைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெரிவது என்ன? ஆபாச வக்கிரமான காட்சிகள், பெண்களை இழிவாக நடத்துவது, அளவற்ற வன்முறை, மதவாத அரசியலை ஊக்குவிக்கும் அரசுக்கு ஆதரவான படங்கள் என்றுதான் நிலைமை உள்ளது. கதைக்கு தேவையோ இல்லையோ படத்தினுள் கற்பனைக் கதையான அரசியலுக்கு உதவும் ராமாயணம் வந்துவிடும். எதற்கு என பார்வையாளர்களுக்கே புரியாது. இப்படிப்பட்ட குப்பைகளை எடுப்பதற்கு பலகோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. சிலவேளைகளில் இதுபோன்ற மதவாத படங்களை நாட்டின் ஆட்சித்தலைவரே. தனது அமைச்சரவையில் உள்ள குற்றவாளி அமைச்சர்களுடன் அமர்ந்து கண்டு காண்பார். அதைப்பற்றிய பெருமைமிகு விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பகிர்வார். இந்த லட்சணத்தில் வீடு இடிக்கப்படும், தொழில்களை மிரட்டி பறிக்கும் அவலமான நெருக்கடி நிலையை சிறுபான்மையினர் எப்படி பிறருக்கு கூறுவது? அதற்காக அவர்களும் கேமராக்களை, செல்போன்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
அரை உண்மையை மட்டுமே எடுத்து வைத்து எதிர்க்கட்சிகளை அல்லது மக்களை இழிவுபடுத்தும் கால்நக்கி ஊடகங்கள், சிறுபான்மையினரின் கருத்துகளை கூறும் திரைப்படங்களை ஆதரிக்கவில்லை. அவற்றை ஏற்றுக்கொள்ளவுமில்லை. யூட்யூபில் சிறுபான்மையினரான முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் தங்கள் தரப்பு உண்மைகளை ஆவணப்படமாக முன்வைக்க தொடங்கியுள்ளனர். இவற்றில் பல படங்கள் உலகளவில் நடைபெறும் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டவை. இதைப்பற்றிய செய்தியைக் கூட ஊடகங்கள் வெளியிடாமல் கள்ள மௌனம் காக்கின்றன. இந்தியாவில் திரைப்படங்களைக் கூட தமக்கு ஆதரவானவர்கள் மட்டுமே உலக திரைப்படவிழாவுக்கு அனுப்ப உதவும் நிலை உள்ளது. ஜனநாயக அமைப்புகளை மதவெறியர்கள் எளிதாக கையகப்படுத்திவிட்டனர். இந்த சூழ்நிலையிலும் செல்போன்களில் படம்பிடித்துக் கூட உண்மையை வெளிப்படுத்த சிறுபான்மையினர் முயல்கின்றன. அந்தவகையில், குடியுரிமை சட்ட மசோதா, ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் என இரண்டு விவகாரங்களில் மதவாத அரசு சிறுபான்மையினரை தனது வேட்டைநாய்களைக் கொண்டு அச்சுறுத்தியது.
ஊடகங்களில் காட்டப்பட்டவை எல்லாம் மதவாத அரசுக்கு ஆதரவான காட்சிகள் மட்டுமே. அம்பானி மட்டுமே பல்வேறு மொழிகளில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட செய்தி சேனல்களைக் கட்டுப்படுத்தி மதவாத அரசுக்கு பேருதவி புரிந்து வருகிறார். பதிலுக்கு அந்த அரசும் வணிகரைப் பாதுகாத்து மக்களைக் கைவிடுகிறது. இதெல்லாம் கடந்த பத்தாண்டுகளாக நடந்து வருகிற காட்சிகள்தான். இந்த வகையில் சிறுபான்மையினரை இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற மதவாத அரசு புதிய சட்டங்களை தீட்டியது. அதுதான் குடியுரிமை சட்ட மசோதா. அதை எதிர்த்து போராடிய முஸ்லீம் மக்கள், காவல்துறையால், பல்வேறு ராணுவப்படைகளால் கடுமையாக அடித்து விரட்டப்பட்டனர். தேசதுரோக சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். இதைப்பற்றிய உண்மைகளை இன் எ டிசன்ட் மேனர் - எக்ராஸ் சமான், லேண்ட் ஆப் ட்ரீம்ஸ் - நவ்சீன் கான், காயோ காயோ கலர் - ஷாருக்கான் சவாதா, இன்சைட்ஸ் அண்ட் அவுட்சைட்ஸ் - சையத் அர்பாப் அகமது ஆகிய கலைஞர்கள் திரைப்படங்களாக எடுத்திருக்கிறார்கள். இவை எல்லாமே குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்கள். இரானில் எப்படி அடக்குமுறைக்கு எதிராக குழந்தைகளை மையப்படுத்தி பெரியவர்களுக்கான படங்களை எடுக்கிறார்களோ அதை வகைமையில்தான் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
லேண்ட் ஆப் ட்ரீம்ஸ் படத்தின் ட்ரைலரில் எதற்காக மாணவர் போராட்டங்களில் பங்கெடுத்தீர்கள் என்று இயக்குநர் கேட்கிறார். அதற்கு முஸ்லீம் பெண்மணி, நான் இந்தியர் என்பதால்தான் என பதில் தருகிறார். மேற்சொன்ன படங்களில் பெரும்பாலானவை அப்படியே செல்போனில் பதிவு செய்யப்பட்ட காவல்துறை மாணவர் தாக்குதல் காட்சிகள் உள்ளன. மதவாத அரசின் கால் நக்கிப் பிழைக்கும் எந்த ஊடகங்கள் அவற்றை வெளியிட முடியும்? ஊடகங்கள் கைவிட்டாலும் கூட இணையம் கைவசம் இருப்பதால், அதை சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நன்றி
அவுட்லுக்
in a dissent manner- ehraz zaman, land of dreams -nausheen khan,kayo kayo colour - sharukkhan chavada, insides and outsides -syed arbab ahmad
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.ourcinema.in/festival/film/in-a-dissent-manner/&ved=2ahUKEwiHjN7d4reKAxUpkq8BHb9yAMkQFnoECBMQAQ&usg=AOvVaw25zkcMGucQ4rZxGe1sHuUT
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.nausheenkhanfilms.com/about&ved=2ahUKEwjGz_2B47eKAxWEZ_UHHfz6E0oQFnoECBQQAQ&usg=AOvVaw3ABprQwzdEMabQl5cCRxxE
கருத்துகள்
கருத்துரையிடுக