இடுகைகள்

நியாய் திட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராமர் பாஜக என்ற ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் கிடையாது! - பூபேஷ் பாதல், சத்தீஸ்கர் முதல்வர்

படம்
        பூபேஷ் பாதல் சத்தீஸ்கர் மாநில முதல்வர் கோவிட் -19 வழக்குகள் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக சென்றுவிட்டது. இதை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள் இந்த நிலைமை 21 நாட்களில் கொரானோவை சமாளித்து விடுவோம் என்று சவால் விட்டவர்களின் கன்னத்தில் விழுந்த அறை எனலாம். மகாபாரதம் 18 நாட்களில் எழுதப்பட்டதை இதற்கு உதாரணமாக சொன்னார்கள். இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே சிக்கல் தொடங்கிவிட்டது. வெளிநாடுகளுக்கு மக்கள் சென்றுவருவதை முன்னமே நாம் தடுத்திருக்க வேண்டு்ம். இதனால்தான் நோய் அதிகமாக மக்களுக்கு பரவியது. சத்தீஸ்கரைப் பொறுத்தவரை குறைவான வழக்குகள்தான் பதிவாகியுள்ளன. பொதுமுடக்கம் முடிந்தபோது, மூன்று வழக்குகள்தான் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் இருந்தனர். ஆனால் எங்களைக் கேட்காமல் டஜனுக்கு மேலான ரயில்கள் ஓடத்தொடங்கின. நாங்கள் குஜராத்தில் இருந்து கேட்டது இரண்டு ரயில்களை மட்டும்தான். போக்குவரத்து தொடங்கியதும், அனைத்தும் எங்கள் கைகளைவிட்டு போய்விட்டது. வெளியிலிருந்து மாநிலத்திற்கு மக்கள் வரத்தொடங்கிவிட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் வேலை செய்துகொண்டுதான் உள்ளனர். எங்களால் முடிந்த

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: ஒரு அலசல்

படம்
தி எகனாமிஸ்ட் தேர்தல் 2019 பாஜக, நமோ டிவி, டிவி 9 பாரத் வர்ஷ் என பல்வேறு ஊடகங்களின் பலம் கொண்டு தேர்தலை சந்திக்கவிருக்கிறது. ராகுல், வேலைவாய்ப்புகள், பெண்களுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட விஷயங்களைப் பேசி களமிறங்குகிறார். இதில் மோடியின் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை உடைக்கும் விதமாக, குறைந்தபட்ச ஊதிய திட்டத்தை ராகுல் அறிவித்தார். NYAY எனப்படும் இத்திட்டத்தை மோடி குழுவினர், மறைக்க என்னென்னவோ முயற்சித்தும் முடியவில்லை. தற்போது காங்கிரஸ் தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டு விட்டது. பாஜக, அரசுக்கு நிகராக பல்வேறு அன்பளிப்பு ரக அறிவிப்புகள் இதிலும் உண்டு. புதியவை என்ன? தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை உருவாக்கம். அரசு தேர்வுகளுக்கான கட்டணம் நீக்கப்படும். தொழில்துறையினருக்கு அனுசரணையான வகையில் அரசு செயல்படும். மூன்று ஆண்டுகளுக்கு அரசு, தொழில் நிறுவனங்களின் நடவடிக்கையில் தலையிடாது என்ற ராகுலின் அறிவிப்பை பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள். குறுந்தொழில்துறைக்கு வருமான வரிவிலக்கு உண்டு. அனைவருக்கும் வீடு என்பதில் நகர்ப்புற ஏழைகளும் இணைக்கப்படுவர்.