இடுகைகள்

பைபிலியோஹாலிசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூலின் மீது காதல் கொண்டவர்களைப் பற்றிய நூல் - பைபிலியோஹாலிசம் - டாம் ராபே

படம்
  பைபிலியோஹாலிசம் நூல் அட்டை டாம் ராபே பைபிலியோஹாலிசம் டாம் ராபே பாரதி புத்தகாலயத்தின் புதிய புத்தகம் பேசுது இதழில் ச.சுப்பாராவ் என்பவர் புத்தக காதல் என தொடரை எழுதி வருகிறார். மாதம்தோறும் நூல்களைப் பற்றிய நூல்களை அறிமுகம் செய்கிறார். அதில்தான் பைபிலியோஹாலிசம் என்ற நூல் கிடைத்தது. அதற்காக அவருக்கு நன்றி. பைபிலியோஹாலிசம் என்றால் நூல்களை வாங்கி சேகரித்து வைக்கும் பழக்கம் கொண்டவர் என்று அர்த்தம். இந்த வகை குறைபாடு கொண்ட ஆட்கள் உலகில் நிறையப் பேர் உண்டு. இவர்கள் நூல்களை வாசிக்கிறார்களா என்றால் அதில் கவனம் இருக்காது. செம்பதிப்பு, மலிவுவிலைப்பதிப்பு, கெட்டி அட்டை, பளிச்சிடும் தாள் என ஒரே நூலை பல்வேறு தரத்தில் வாங்கி வீடு முழுக்க அடுக்கி வைத்திருப்பார்கள். நூல்களை வாங்கி வீட்டில் கொண்டு வந்து அடுக்குவதே இவர்களது வேலை. இப்படி நூல்களை வாங்குபவர்கள், வாசிப்பவர்கள், அரிய நூல்களை வாங்குபவர்கள், நூல்களை வாசிப்பதே வாழ்க்கை என இருப்பவர்கள என ஏராளமானவர்கள் பற்றி பகடியான முறையில் டாம் ராபே   விவரித்து எழுதியிருக்கிறார். ஏனெனில் அவரே பைபிலியோஹாலிக்தான். நூல்களை வாசிக்கும் வேட்கை கொண்டவர்கள் பற்