வட இந்திய வணிகரிடமிருந்து நூறு கோடு கள்ளப்பணத்தை கொள்ளையடிக்க துடிக்கும் நால்வர்!
நூறு கோடி தெலுங்கு சேட்டன் குமார், ராகுல், ஏமிஎலா இயக்கம் விராட் சக்ரவர்த்தி இசை சாய் கார்த்திக் பணமதிப்புநீக்கத்தை அடிப்படையாக வைத்து நிறைய கிரைம் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் நூறு கோடி. மற்றபடி படத்தில் சொல்வதற்கு வேறு எந்த சிறப்பான விஷயங்களுமில்லை. வட இந்திய வணிகர் பெரும் சொத்துக்காரர். ஆள் கருப்பாக இருக்கிறார். அவரை சேட்டு என்கிறார்கள். பட்ஜெட் காரணமாக சேட்டை தென்னிந்தியாவிலேயே பிடித்துவிட்டார்கள் போல. அவருக்கு ஓரிரவில் திடீரென பினாமியிடமிருந்து போன். வருமான வரித்துறை ரெய்டுக்கு வருகிறார்கள் என. இதனால், அவர் ரகசியமாக சுவற்றில் ஒளித்து வைத்திருந்த பணத்தை சுத்தி வைத்து உடைத்து திறந்து நூறுகோடி பணத்தை எடுத்து அதை கோணிப்பையில் கட்டி வேறு இடத்திற்கு மாற்ற முனைகிறார். அப்படி மாற்ற முயலும்போது, அவரது பணம் திடீரென வைத்த இடத்தில் இருந்து காணாமல் போகிறது. இதனால் அவர் அதிர்ச்சிக்குள்ளாகி மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோகிறார். கொலைப்பழி அவரது இளம்காதலி மீது விழுகிறது. காதலி அங்கிருந்து தனது தோழி வீட்டுக்கு தப்பியோடுகிறார். இளம் காதலி, சேட்டின் பினாமி, போலீஸ் இ...