இடுகைகள்

நாராயண ரெட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தர்மம் அர்த்தம் காமம் என உறவுகளில் அறநெறியை வலியுறுத்தும் காம சூத்திரம்!

படம்
       காமசூத்திரம் நாராயண ரெட்டி விகடன் பிரசுரம் ப.1000க்கும் மேல் விலை 230 நூலின் பெயர் காமசூத்திரம் என்றவுடன் பல்வேறு போஸ்களை கற்பனை செய்யவேண்டாம். இந்த நூல் முழுக்க தர்மம், அர்த்தம், காமம் என அடிப்படை நீதிநெறிகளைப் பேசுகிறது. நூலில் எவ்வித ஓவியங்களும் கிடையாது. அப்படி தேடுபவர்கள் வேறு நூல்களை தேடுங்கள். கண்டடையலாம். வடமொழி நூலை தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். அதை புரிந்துகொண்டால் நூலை வாசிக்கும்போது ஏற்படும் இடர்ப்பாடுகளை முன்னமே சகித்துக்கொள்ள முடியும். நூலில் வாத்சாயனார் சொன்னது மட்டும் இல்லை. நாராயண ரெட்டி சொல்லும் பழைமைவாத கருத்துகளும் ஏராளம் உள்ளன. அவற்றை அன்னம் போல பிரித்துப்போட்டுவிட்டு அடிப்படையாக மூல ஆசிரியர் என்ன சொன்னாரோ அதை மட்டும் படிக்கலாம். காமம் என்பதை வாத்சாயனார் முன்னிலைப் படுத்தவில்லை. பெண்ணிடம் மென்மையாக பேசுவது எப்படி, மனதை தாம்பத்திய உறவுக்கு தயார்படுத்துவதற்கான ஆலோசனைகள், உத்திகள் ஆகியவற்றைக் கூறுகிறார். பலவந்தம் என்பதை அவர் ஆதரிக்கவில்லை. அதேசமயம் அவரின் காலத்தில் அரசர்கள், மந்திரிகள், பிரபுக்கள் பிடித்த பெண்களை அடைய பைசாசிக, ராட்சஸ ...