இடுகைகள்

பொங்கல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுயநினைவு எங்கே போனது - மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
பொதுவாக நாம் தினசரி நிறைய நினைவுகளால் அலைகழிக்கப்பட்டு வருகிறோம். அதில் குறை சொல்ல ஏதுமில்லை. ஆனால் மக்களுடன் இணைந்து வேலைகளை செய்யும்போது, அது நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும். நெடுநாள் பார்க்காத நண்பர், அவர் கல்லூரியில் அல்லது பள்ளியில் படித்திருப்பார். போனில் பேசிவிட்டு உடனே தன்னை அடையாளம் கண்டுபிடி என மோசமாக விளையாடுவார். இதெல்லாம் சத்திய சோதனை என்றாலும் வேறு வகை. நான் மயிலாப்பூரில் உள்ள நெருக்கடியான தெரு ஒன்றில் உள்ள மேன்ஷனில் குடியிருக்கிறேன். அங்கு புதிதாக வலம்புரி பிள்ளையார் கோவிலுக்கு பூஜை செய்யும் குழு ஒன்று வந்தது. வாடகைக்கு வந்தது ஒருவர் என்றாலும் அவருக்கு உதவி செய்ய வந்த பரிசாரகர்கள் குழு அதிகம். இவர்கள் அடிக்கடி தான் எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருப்பார்கள். ஒருநாள் இரவு ஆபீசிலிருந்து ரூமுக்கு சென்றேன். சென்றபிறகு குளிக்கலாமே என்று தோன்றியது. நேரமே குளிக்கவில்லையென்றால் பக்கத்தில் உள்ள ஜவ்வாது மனிதர், குளியலறையை கடுப்பேற்றும் ஜவ்வாது மணம் கொண்ட பாத்டப்பாக மாற்றிவிடுவார். தலையே வலிக்கும் அளவு உடம்பில் ஜவ்வாது பூசிக்கொள்வத

நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி வகைகள் எவை?

நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி வகைகள்! நெற்பயிரின் நோய்த்தாக்குதலை இயற்கையாக கட்டுப்படுத்துபவை பூச்சி இனங்கள். ஆனால் இவை வயலுக்கு வரத் தடையாக இருப்பது, பல்வேறு நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகள் ஆகும். நன்மை செய்யும் பூச்சிகளை நாம் வயலுக்கு வரவைத்தால், பூச்சிக்கொல்லி செலவுகள் பெருமளவு குறையும். சில நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி இனங்களைப் பார்ப்போம்.  முட்டை ஒட்டுண்ணிகள்,   கிரைசோபா,   குளவி இனங்கள், தட்டான் இனங்கள், பொறி வண்டு, நீளக்கொம்பு வெட்டுக்கிளி ஆகியவை வயலில் உள்ள பூச்சிகளை தின்று பயிர்களைக் காப்பாற்றுகின்றன.  முட்டை ஒட்டுண்ணிகள் கைகோகிரம்மா டெலிநாமஸ், டெட்ராஸ்டிக்ஸ் ஒட்டுண்ணிகள் காய்ப்புழுக்களின் மீது முட்டையிட்டு, அவற்றின் இனத்தை அழிக்கின்றன. இந்த ஒட்டுண்ணிகள் கருப்பு நிறம் கொண்டவை. தன் வாழ்நாளில் இருபது முதல் நாற்பது தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கின்றன.  கிரைசோபா இப்பூச்சி, குஞ்சுப் பருவத்திலிருந்தே அசுவினி, இலைப்பேன் ஆகியவற்றைத் தாக்குகிறது. ஆண்பூச்சிகள் 12 நாட்களும், பெண் பூச்சிகள் 35 நாட்களும் உயிர்வாழும். தன் வாழ்நாளில் கிர