இடுகைகள்

உரிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அஞ்சலி- பத்திரிகையாளர் குளோரியா ஸ்டைனம் பெண் உரிமைகளின் எதிரொலி

கல்வியாளர், எழுத்தாளர், பெண்ணிய இயக்க முன்னோடி, சமூக சீர்திருத்தவாதி என்று பன்முகங்கள் கொண்ட குளோரியா ஸ்டைனம் அவர்களின் வாழ்க்கைப் பயணமும், அவரது அரிய பணிகளும் உலகெங்கிலும் உள்ள பெண்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவரது 90-ஆவது வயதிலும், அவரது குரல் மாற்றத்திற்கான கருவியாகவும், அடக்குமுறைக்கு எதிரான கேடயமாகவும் தொடர்வது உண்மையிலேயே வியத்தகு. 1934-ஆம் ஆண்டு மார்ச் 25-இல் பிறந்த குளோரியா, தனது இளமைக்காலத்தில் தந்தையின் வேலை காரணமாக அடிக்கடி இடம்பெயரும் வாழ்க்கையை மேற்கொண்டார். இந்த அலைபாயும் வாழ்க்கை, பின்னாளில் அவரது பயணங்கள் நிறைந்த வாழ்க்கைக்கும், மனிதர்களின் பல்வேறு நிலைகளைப் புரிந்துகொள்வதற்கும் அடித்தளமாக அமைந்தது. 1956-இல் ஸ்மித் கல்லூரியில் சிறப்புப் பட்டம் பெற்ற பின், செஸ்டர் போல்ஸ் உதவித்தொகையின் கீழ் இந்தியாவில் இரண்டு ஆண்டுகள் கழித்தார். அங்கு காந்தியத்தின் தாக்கமும், இந்தியப் பத்திரிகைகளுக்கு எழுதிய அனுபவமும் அவரது எழுத்து மற்றும் செயற்பாட்டு வாழ்க்கையை வடிவமைத்தன. 1960-களில் பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய குளோரியா, 1968-இல் 'நியூயார்க்...

என் மீது ஒட்டப்படும் லேபிள்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது - ஆப்கன் திரை இயக்குநர் சாஹர் பானு சதாத்

படம்
  ஆப்கானிஸ்தான், அங்கு முதலில் அமெரிக்கா,இந்தியா பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்தனர். பிறகு, பல்வேறு திட்டங்களை செய்த பிறகு என்ன நினைத்தார்களோ, தாலிபன்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு இருநாடுகளும் தங்கள் நாடு வந்து சேர்ந்துவிட்டனர். தாலிபன்கள் முட்டாள் மூர்க்கர்கள். மதச்சட்டப்படிஆட்சி நடத்தக்கூடியவர்கள்.  அமெரிக்க, இந்திய நாடுகளில் ஆதரவில் ஆப்கனில் பெண்களின் முன்னேற்றம் மேலேறி உயர்ந்து வந்தது. கல்வி கற்க, விரும்பிய உடையை உடுத்த, வெளியே வேலைக்கு செல்லக்கூடிய, பேசக்கூடிய அடிப்படை விஷயங்கள் நடைபெற்றன. இப்போது மீண்டும் அவர்கள் கற்காலத்திற்கே சென்றுவிட்டனர். அண்மையில், இந்தியா வந்த தாலிபன்கள், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆண்களை மட்டுமே கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதற்கு பெண்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆண்கள் கண்டனம் தெரிவித்தது குறைவுதான்.  இப்போது சில நாட்களுக்கு முன்னர் ஆப்கனின் மற்றொரு சட்டம் வந்திருக்கிறது. குடும்ப வன்முறையை சட்டப்பூர்வமாக்கும் சட்டம் அது. அதாவது, கணவர் மனைவியை அடிக்கலாம். ஆனால், எலும்பு முறியும் காயம் ஏற்படக்கூடாது....

அரசு இல்லாத ஒழுங்கு, வன்முறை இல்லாத அமைதி - மக்கள் அதிகாரம்

படம்
            மக்கள் அதிகாரம் 1 தமிழ் திரைப்படங்களில் காவல்துறையினரின் கொடூரங்களை உண்மையைக் காக்க அப்படி செய்கிறார்கள் என காட்டியிருப்பார்கள். ஆய்வாளர், தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி யாரொருவரையும் கள்ளத்துப்பாக்கியால் சுடுவார். அல்லது அரசு வழங்கிய துப்பாக்கியால் சுட்டுவிட்டு எப்படி கணக்கு காட்டவேண்டுமென தனக்கு தெரியும், உரிமம் பெற்ற ரவுடி, எவுடாய்த்தே நாக்கேண்டி, சம்பேஸ்தா, கண்ட கோசேஸ்தா என பொறிபறக்க வசனம் பேசுவார். இதெல்லாம் திரையில் சரி. நிஜத்தில் பாதிக்கப்படும் மக்கள் எவரும் கல்லறையில் இருந்து மீண்டெழுந்து தனக்கு நடந்த அநீதியைக் கூறுவதில்லை. அதுதான் வன்முறையின் பலம். செத்தால் புதைத்துவிடலாம். உயிரோடு இருந்தாலும் கை, கால்களை உடைத்து விட்டால் அவன் சோறு தின்ன, மலம் கழிக்க உடல் ஒத்துழைக்கவே பல மாதங்கள் ஆகும். அதுவுமில்லாமல் வன்முறை ஏற்படுத்திய பயம் காரணமாக அரசுக்கு எதிராக அவன் சாட்சியமும் கூறமாட்டான். அரசுக்கு ஆதரவாக உள்ள தொழிலதிபர்களுக்காக, நேரடியாக அரசுக்காக என ஏதோ ஒருவகையில் மக்கள் மீது காவல்துறையின் தாக்குதல் அல்லது கொலை நடைபெறுகிறது. இப்படியாக வன்முற...

உணவு விமர்சகர் தலையில் அடிபட்டு தொன்மைக்காலத்திற்கு சென்றால்.... ஃபுடி குயின் - சீன டிராமா

படம்
              ஃபுடி குயின் சீன டிராமா நவீன காலத்தில் யூட்யூபில் சேனல் வைத்து ஹோட்டல்களில் போய் சாப்பிட்டு அதைப் பற்றி விமர்சனம் செய்யும் பெண்மணி, தொன்மைக் காலத்திற்கு செல்கிறார். அங்கு பேரரசரின் மனைவியாக இருக்கிறார். அவரின்றி, கணவருக்கு நான்கு துணைவிகள் உண்டு. இப்படியான சூழலில் அவர் அரண்மனையில் தனக்கு பிடித்த சமையல் ஐட்டங்களை செய்து அனைவருக்கும் கொடுக்கிறார். இதனால் என்னவானது, அரசியல் சதிகள், பேரரசரைக் கொல்லும் முயற்சிகள் என நிறைய விஷயங்களை நாடகம் பேசுகிறது. அரசியல், சதி, பொறாமை, வஞ்சம், செக்ஸ் என இதையெல்லாம் விடுங்கள். இந்த டிராமா முழுக்க உணவுதான் பிரதானமானது. தொடர் முழுக்க பல்வேறு சீன கலாசார உணவுகளை வண்ணமாக சமைத்து தள்ளியிருக்கிறார்கள். அதை சாப்பிடவெனவே நாயகியின் தோழி இருக்கிறாள். அவளுக்கு முக்கிய வேலை ராணியை கருத்தரிக்க செய்வது, அடுத்து, ராணி செய்யும் உணவுகளை முதல் ஆளாக சாப்பிடுவது, முதல் வேலையை விட தொடர் முழுக்க இரண்டாவது வேலையைத்தான் சரியாக செய்கிறார். ஓகே உணவுகளை சாப்பிடும் பெண்ணை நேருக்கு நேராக பார்ப்பதும் அழகாகத்தான் இருக்கிறது. பேரரசருக்கு திர...

பெண்கள் தங்கள் உரிமைக்காக பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லை - ஏஞ்செலிகா அரிபம்

படம்
        எழுத்தாளர் ஏஞ்செலிகா அரிபம் இவர், அண்மையில் பிஃப்டீன் என்ற நூலை ஆகாஈ் சத்தியவாலியோடு இணைந்துஎழுதி வெளியிட்டிருக்கிறார். அவரிடம் பேசினோம். பெண்கள் அரசியலில் பங்கு பெற்று பாலின பாகுபாடு, இனவெறி ஆகியவற்றை எதிர்கொண்டு வருகிறார்கள். இதைப் பற்றிய உங்களது கருத்து என்ன? சிறுபான்மை இனக்குழுவைச் சேர்ந்த பெண் என்ற வகையில், அன்னி மஸ்கரின், பேகம் அய்ஸாஸ் ரசூல், தக்சாயணி வேலாயுதன் ஆகியோரின் போராட்டங்களை அடையாளம் கண்டுள்ளேன். ஆனால் இன்று அவர்களைப் போல தேசிய அரசியலில் எனக்கு முன்னுதாரணங்கள் இல்லை. இன்றைய சூழலில் பாலின பாகுபாடு, இனவெறி தாக்குதல்கள் அதிகமாகியுள்ளன. சின்கி, சோமெயின், மோமோஸ் என பட்டப்பெயரிட்டு என்னை இழிவுபடுத்திவருகின்றனர். எதற்கு நீ அரசியலுக்கு வந்தாய், உன்னுடைய இனத்தைச் சேர்ந்த பெண்கள் கடைகளில் விற்பனை பெண்களாக, பரிசாரகர்களாக சிறப்பாக பணியாற்றுகிறார்களே என்ற பாகுபாடான கேள்விகளை எதிர்கொண்டுள்ளேன்.   இங்கு ஆண்களே பெண்களுக்கான வேலைகளை உருவாக்குகிறார்கள். அதை செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். பெண்கள், தங்களுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை என குரலுயர்த்தி உரிம...

அடிப்படை உரிமைகளை கோரும் போராளிகளை கண்காணிக்கும் சீன அரசு!

படம்
  கண்காணிப்பு அரசியலில் வேகமெடுக்கும் சீனா  சிசிடிவி கேமராக்களை செயற்கை நுண்ணறிவு வசதியுடன் பொருத்தி அதை இயக்கி குற்றவாளிகளை பிடிப்பது சீனாவின் சிறப்பம்சம். இதில் நாம் அறியாத ஒன்று. இதே வசதியைப் பயன்படுத்தி அடிப்படை உரிமைக்காக போராடுபவர்களை முழுமையாக முடக்க முடியும் என்பதுதான். சீனாவில் மட்டுமல்ல. அதன் ஆட்சி ஹாங்காங்கிலும் விரிவடைந்துள்ளது. அங்குள்ள காவல்துறைஅதிகாரிகளும் இப்போது சீனாவின் காவல்துறை போலவே அரசியல் உரிமை போராளிகளை கைதுசெய்து, கண்காணித்து விசாரித்து மிரட்டி வருகின்றனர். இங்கு நாம் பார்க்கப்போவது அப்படியான போராளி ஒருவரின் வாழ்க்கை பற்றியதுதான்.  ஹாங்காங்கைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆக்னஸ் சோ. இவர் கனடாவில் படிக்க விண்ணப்பித்தார். பல்கலைக்கழகத்தில் கூட அனுமதி கடிதம் வழங்கிவிட்டனர். ஆனால், அவரது பாஸ்போர்ட்டை ஹாங்காங் அரசு தர மறுத்துவிட்டது. அதை ஆக்னஸ் பெற சில நிபந்தனைகளை விதித்தது. ஹாங்காங்கில் அவர் செய்த போராட்டங்கள், பங்கேற்புகள் அனைத்தும் வருத்தம் தெரிவிப்பது, கம்யூனிஸ்ட் கொள்கை சுற்றுலாவை ஏற்கவேண்டும் என்பவைதான அவை.  ஆக்னஸூக்கு அப்படியான கருத்தியல் சுற்றுல...

ஈரானிய அரசு கொடூரமான முறையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்தி உண்மையை மறைக்க முயல்கிறது - நர்கேஸ் மொகம்மதி

படம்
  நர்கேஸ் மொகம்மதி நர்கேஸ் மொகம்மதி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் உங்களுடைய இளமைக்காலத்தை நினைத்துப்பார்க்கும்போது, ஈரானிய குடும்பம் இப்படித்தான் இருக்கும் என நாங்கள் புரிந்துகொள்ளள ஏதாவது விஷயங்கள் உண்டா? ஈரானில் குடும்ப உறவுகள் வலிமையானவை. அதோடு இணைந்த சொந்த பந்த உறவுகளும் அதேபோல்தான். இந்த வகையில் எனது அம்மாவின் குடும்ப உறவுகளில் அரசியலில் தீவிரமாக ஊக்கமாக ஈடுபட்டிருந்தனர். 1979ஆம் ஆண்டு புரட்சியில், எனது அம்மா குடும்பத்தினர் சிலரும், அப்பாவின் குடும்பத்தினர் சிலரும் சிறைப்பட்டனர். தூக்கிலும் போடப்பட்டனர். இந்த சம்பவங்கள்தான் எனது சிறுவயது நினைவுகளாக போராட்டத்தையும் எதிர்ப்பையும் நினைவூட்டி வருகின்றன.  ஈரானிய பெண்ணாக ஒருவரின் வாழ்க்கை எப்படி இருந்தது? எனது அம்மா, அரசு வற்புறுத்திய கருப்பு நிறு பர்காவை அணியவில்லை. வண்ண நிறங்களைக் கொண்ட உடைகளை அணிந்தார். ஆனால் அரசு தனது கருத்துகளை மதிப்புகளை மக்கள் மீது திணித்தது. மக்கள் கொண்டிருந்த கருத்துகளுக்கும் அரசுக்கும் பொருந்திப்போகவில்லை. தொன்மை பழக்க வழக்கங்களை உடைத்து சுதந்திரம் கேட்கும் போராட்டங்கள் இன்று வரை நடந்து வருகின்றன....

பால்புதுமையினரான மார்ஷா கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன?

படம்
  மார்ஷா பி ஜான்சன் கொல்லப்பட்டது ஏன்? 1992ஆம் ஆண்டு, ஜூலை ஆறாம்தேதி நாற்பத்து ஆறு வயதான மார்ஷா ஹட்சன் ஆற்றில் பிணமாக மிதந்தார். அப்போதுதான் பால்புதுமையினருக்கான நகர பேரணி நியூயார்க்கில் நடைபெற்று முடிந்திருந்தது. பால்புதுமையினரன மார்ஷாவின் இறப்பை காவல்துறை தற்கொலையாகவே கையாண்டது. ஒரு கும்பல், மார்ஷாவை அடிக்க துரத்திச் செல்வதை மக்கள் பார்த்து சாட்சி சொன்னபிறகே அவரின் தலையின் பின்புறம் அடிபட்டிருந்ததை போலீசார் கவனித்தனர். பிறகுதான் தற்கொலைக்கோண விசாரணை மாறி, கொலை என்ற ரீதியில் விசாரிக்கத் தொடங்கினர். ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணியான மார்ஷா, பால்புதுமையினரின் உரிமைக்காக போராடியவர். ஸ்டோன்வால் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தோழி சில்வியா ரிவேராவுக்கு உதவியவர். சில்வியா 2002ஆம் ஆண்டு காலமானார். இவருடன் சேர்ந்து மார்ஷா ஸ்ட்ரீட் டிரான்ஸ்வெஸ்டைட் ரிவெல்யூஷனரிஸ்   - ஸ்டார் என்ற அமைப்பை   தொடங்கினார். இந்த அமைப்பு நியூயார்க் நகரில் வீடற்று தெருவில் திரியும் இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்கானது. 2021ஆம் ஆண்டு மார்ஷாவின் நேர்காணல் பே இட்   நோ மைண்ட் என்ற ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டு வெள...

சிறுவயது குற்றவாளிகளை அடையாளம் கண்டு தடுப்பது எளியது அல்ல!

படம்
  அசுர குலம் 5 மனமென்னும் இருட்குகை 1.0   குழந்தைகள் செய்யும் குறும்புகளுக்கு எல்லாம் இப்படி பெயர் வைப்பது நல்லதா என சிலர் நினைக்கலாம். ஆனால் இதில் பெற்றோரின் பங்கும் உண்டு. அவர்கள் குழந்தைகளை எந்த மாதிரியான சூழலில் வளர்க்கிறார்கள். அதன் மூலம்   அவர்களின் மனம் எப்படி விளைகிறது என்பதன் அடிப்படையில்தான் அறிகுறிகளைப் பார்க்கவேண்டும். உளவியலாளர்கள் சிறுவர்களை ஆராய்ந்தபோது பதிமூன்று வயது முதல் பதினெட்டு வயது வரை சோதித்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பலரும் வயது வந்தவர்களைப் போன்ற தன்மையில் இருந்தனர்.   சைக்கோபதி செக்லிஸ்டில் சிறுவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தனர். இளைஞர், வாலிபர் ஆகியோரிடம் அவர்களின் மனநிலை பற்றி பேசும்போது தங்களை தற்காத்துக்கொள்ள முனைவார்கள். அந்த இயல்பு சிறுவர்களிடம் இல்லை என்பதுதான் மகிழ்ச்சியான ஒரே விஷயம். தன்னிடமுள்ள வன்முறையான குணத்தை பற்றி வெளிப்படையாக பகிர்ந்துகொண்டனர். அதில் ஒரு சிறுவன், எனக்கு இப்படி இருப்பது பிடித்திருக்கிறது. நான் ஏதேனும் பிரச்னையில் சிக்கிக் கொள்ளும்போது பெற்றோர் அதிகம் பயப்படுகிறார்கள். ஆனால் எனக்கு நல்ல...

வெறுப்பின் வாசம் வீசும் ரத்தம் தோய்ந்த காற்று - இந்தியாவின் மதவாத வன்முறைக்கு எதிராக காந்தி

படம்
            காந்தி இந்தியாவின் தேசப்பிதா என்று அழைக்கப்பட்ட காலம் இருந்தது . ஆனால் அவர் மக்கள் மீது காட்டிய பாசங்கற்ற அக்கறையும் அன்பும் அவரது உயிரைப் பிரித்தது . அவரது உடலில் பாய்ந்த மூன்று தோட்டாக்கள் உடலை நம்மிடமிருந்து பிரித்திருக்கலாம் . பிறரைப் பற்றி அக்கறை கொள்ளும் காந்தியின் மதிப்புகளை அல்ல . இன்று காந்தி பிறந்த தேசத்தில் அவருக்கு இருக்கும் மதிப்பு எதிர்காலத்தில் இருக்கும் என்று கூறமுடியாது . இந்து - முஸ்லீம் பிரச்னையில் காந்தியின் நிலைப்பாடு காரணமாக அவர் மீது விரோதம் பாராட்டி கருத்துகளைப் பேசும் பதிவிடும் குழுக்கள் அனைத்து இடங்களிலும் உருவாகி வளர்ந்து வருகிறார்கள் . காந்தி தமிழ்நாட்டில் மதுரைக்கு வந்தபோதுதான் வறுமையில் உள்ள விவசாயிகளின் நிலையைப் பார்த்து தனது உடையை அரையாடையாக மாற்றிக்கொண்டதாக கூறுவார்கள் . அவர் அந்த ஆடையை தனது செயல்பாடுகளுக்கு கருவியாக கொண்டார் . தனது போராட்டத்திற்கு தனது உடலையே ஆயுதமாக பயன்படுத்த காந்தி கற்றிருந்தார் . இதனால்தான் இங்கிலாந்தின் பக்கிங்காம் மாளிகைக்கு காந்தி அரையாடையில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்ப...

டெக் நிறுவனங்கள் எப்படி தனி மனிதர்களை உளவு பார்க்கின்றன தெரியுமா?

படம்
  உளவு பார்க்கும் ஆயிரம் கண்கள்! உலகம் முழுக்க செயல்படும் பன்னாட்டு டெக் நிறுவனங்கள், தகவல் சுதந்திரத்திற்கு ஆதரவாக நின்றாலும் பல்வேறு வழிகளில் அவர்களை கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.  ஆ ப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தகவல் பாதுகாப்பு சட்டப்படி தங்களை வடிவமைத்து வருகின்றன. இதில் வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு கொஞ்சம் உத்தரவாதமான நிறுவனம் என  மக்கள் நினைப்பது ஆப்பிளைத்தான். ஆப்பிள் இயக்குநர் டிம் குக், பாட்காஸ்ட் ஒன்றில் பேசியபோது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள மாடலில் விளம்பரங்கள் மூலமாக வருமானம் அதிகம் கிடைக்கிறது. எனவே அவர்களால் மக்களின் தகவல்களைப் பாதுகாக்க முடியாது என்று கூறினார். இப்படி நேரடியாகவே விமர்சிப்பதை ஜனநாயகம் என ஏற்கலாம். ஆனால், ஆப்பிள் தகவல் பாதுகாப்பு கொள்கைகளை உலகம் முழுக்க மாற்றியமைத்துள்ளது. மக்களை கண்காணிப்பதை ஆப்பிள் இன்னும் மறைமுகமாகவே செய்யத் தொடங்கியுள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் 15இல் புகைப்படத்தில் உள்ள எழுத்துகளை நகல் எடுத்து இன்னொரு இடத்தில் பதியமுடியும். படத்திலுள்ள எண்ணைத் தொட...