பெண்களின் உரிமைகள், விவசாயிகளுக்காக பாடுபட்ட குடியரசுத்தலைவர்! - பிரதீபா பாட்டீல்

 




பிரதீபா பாட்டீல்


பிரதீபா பாட்டீல்

2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரை குடியரசுத்தலைவராக பணியாற்றியவர் பிரதீபா. 

1934ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஜால்காவோன் என்ற இடத்தில் டிசம்பர் 19 அன்று பிறந்தவர். நாராயண் ராவ் பாட்டீல், கங்காபாய் பாட்டீல் ஆகியோர்தான் இவரின் பெற்றோர். பிரதீபா தனது பனிரெண்டு வயதில் அம்மாவை இழந்தார். பாசகேப் என்ற அத்தை கண்டிப்பும் கறாருமாக பிரதீபை வளர்த்தார்.  அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர் பிரதீபா. பாம்பே சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும் முடித்துள்ளார். 

தனது 27 வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பிறகு மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினரானார். 1962ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தின் எட்லாபாத்  தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.  பொது சுகாதாரம், சமூக பாதுகாப்பு ஆகியவற்றை கவனித்தார். பிரதீபா, டாக்டர் தேவிசிங் ஷெகாவத் என்பவரை மணந்தார். இவர் அரசியல்வாதி மற்றும் பேராசிரியர். 

2004ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் 12   ஆவது குடியரசுத்தலைவராக பதவியேற்றார். நேரு, சோனியா ஆகியோரின் வழிவந்தவர்களுக்கு மரியாதை வழங்கி பக்குவதாக நடந்துகொண்டார். இதனால் பதவிக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. 

இவரிடம் வந்த கருணை மனுக்களில் 35 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து அனுப்பினார். மேலும் வெளிநாடுகளுக்கு தனது குடும்ப உறுப்பினர்களை பல்காக கொண்டு சென்று பதவியின் சுகங்களை அனுபவித்தார் என்ற குற்றச்சாட்டுகளை ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் எழுப்பின. 

அலுவலகத்தில் இருந்தபோது சுற்றுலா சென்ற நேரம் போக விவசாயிகள் பிரச்னை, பெண்களின் உரிமை ஆகியவற்றையும் கவனித்தார். அவற்றுக்கு தீர்வு கண்டுபிடிக்க முயன்றார். 

டெல் மீ வொய் இதழ் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்