கொச்சி பின்னணியில் ரோமியோ ஜூலியட் கதை! - ரொமான்டிக் - தெலுங்கு

 




ரொமான்டிக்






ரொமான்டிக் 

தெலுங்கு 

இயக்குநர் அனில் பதூரி

கதை, திரைக்கதை, தயாரிப்பு, வசனம் - ஆல் இன் ஆல் அனைத்துமே பூரி ஜெகன்னாத். 


கோவாவில் உள்ள போதைப்பொருள் கும்பலின் தலைவன் வாஸ்கோவுக்கும், இன்ஸ்பெக்டர் ஒருவரின் தங்கை மோனிகாவுக்குமான காதல், இன்ன பிற பிரச்னைகளும்தான் கதை. 

படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடனே பலரும் கேத்திகா சர்மா மீது மையல் கொண்டு படத்தை எப்போது புக் செய்யலாம் என ஸ்மார்ட்போனில் ஐநாக்ஸ் ஆப்பை தேடுவார்கள். ஆனால் அவசரப்படாதீர்கள். 



ரொமான்டிக் - ஆகாஷ் பூரி, கேத்திகா சர்மா


ரோமியோ ஜூலியட் ரகத்தில்தான் முடிகிறது,. ட்ரெய்லரில் உள்ள காட்சிகள் மட்டுமே முழுமையாக படத்தில் தேறுகிற சில காட்சிகள். எனவே பணத்தை வீணடிக்காதீர்கள். 

படத்தைப் பார்க்க வைக்கத் தூண்டுவது ஒரே ஒருவர்தான் அது கேத்திகா சர்மாதான். அவரது அழகான உடலும் அதனை மேயும் கேமரா கோணங்களும்தான் படத்தை அழகாக்குகிறது. படத்தில் வேறு ஒன்றும் இல்லை. 

கோவாவில் இரண்டு போதைக் கடத்தல் கும்பல்கள், அதில் ஒன்றில் வாஸ்கோ சேருகிறார்.வேலை மோசம் என்றாலும் லட்சியம் பெரிது. குடிசையில் வாழும் தனது மக்களை வீடுகட்டி வாழ வைப்பதுதான் நோக்கம். அதற்காகவே தனி பவுண்டேஷன் ஒன்றைத் தொடங்க நினைக்கிறார். அதற்குத்தான் கோக்கு மாக்கு வேலைகள். இதை செய்யும்போதுதான் மோனிகா என்ற பெண்ணைப் பார்க்கிறார். இவர் அப்பகுதி, இன்ஸ்பெக்டரின் தங்கை. வாஸ்கோவைப் பொறுத்தவரை இந்த அழகியுடன் ஒருநாள் இரவு இருக்கவேண்டும் என பார்க்கும்போதெல்லாம் அவரை கட்டிப்பிடித்து பட்டுக்கோடம் சில்மிஷங்களை செய்கிறார். 



நாமும் சில சமயங்களில் வாட் இஸ் திஸ் பட்டுக்கோடம் என கோபமாகிறோம். அப்படி ஒரு லூசுப் பெண் பாத்திரம்தான் இது. சீனு வைட்லா தனது படங்களில் சொல்லுவார். லாஜிக் பார்த்தால் மேஜிக் மிஸ் ஆகிரும் என்று. அதனை நெஞ்சில் நிறுத்தி படம் பார்த்தால், இசை அமைப்பாளர் சுனில் காஷ்யப்பின் இசையும் பாடல்களும் படத்தை பொறுமையோடு பார்க்க வைக்கின்றன. 

படத்தை எடுக்கும்போதே இதை எப்படி பார்ப்பார்கள் என இயக்குநருக்கு தோன்றியிருக்குமோ என்னவோ.. நா வல்ல காதே என பாடல் வைத்திருக்கிறார். படம் பார்த்து முடித்ததும் நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.. வாஸ்கோ செத்தால் சாகட்டும். அழகான கேத்திகா செத்துவிட்டாரே.....ச்சோ ச்சோ...... பாருங்கள் இப்படி சொல்லும்போது தன்னைத்தான் அழைக்கிறான் என நாய்க்குட்டி அருகில் வருகிறது. தள்ளிப்போ சவமே....

கேத்திகா சர்மாவுக்காக.....

கோமாளிமேடை டீம் 





கருத்துகள்