இடுகைகள்

சபரிமலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதவாத குழுக்களுக்கு கேரளத்தில் எந்த வரவேற்பும் கிடைக்காது! கேரள முதல்வர் பினராயி விஜயன்

படம்
          பினராயி விஜயன் கேரள முதல்வர் உங்கள் இடதுசாரி அரசை மோசமாக காட்சிபடுத்துவதோடு , அதனை பலவீனப்படுத்தவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என்று கூறிவருகிறீர்கள் . ஏன் அப்படி கூறுகிறீர்கள் ? எங்கள் அரசு மீதான தாக்குதல் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது . அப்போது பஞ்சாயத்து தேர்தலில் இடதுசாரி அரசு வெற்றி பெற்றிருந்தது . ஊடகங்களை விலைக்கு வாங்கிய பாஜக தலைவர்கள் அரசு மீது குற்றச்சாட்டுகளை வீசத் தொடங்கினர் . மத்திய ஏஜென்சிகளை பயன்படுத்தி மாநில அரசின்போது பல்வேறு வழக்குகளைத் தொடுத்தனர் . என்மீது புகார் கொடுத்தவர் தற்போது அதனை மறுத்துவருகிறார் . அவரின் பெயரை நான் கூற விரும்பவில்லை .    தங்க கடத்தல் வழக்கு பற்றி முன்னதாகவே பிரதமருக்கு எழுதியிருக்கிறேன் என்று சொன்னீர்கள் . வழக்கு விசாரணை எங்கு தவறாகிப்போனதுழ பிரதமருக்கு கடிதம் எழுதியது உண்மைதான் . தங்கத்தை சட்டவிரோதமாக கடத்துவது என்பது பொருளாதாரத்திற்கு ஆபத்தானது . விசாரணை தொடங்குவதற்கு ஆதரவாக நின்றேன் . ஆனால் மெல்ல மத்திய அரசின் விசாரணை எங்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக திரும்பிவிட்டது . நீங்கள் முன்னர் காங்