இடுகைகள்

அரசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹாரி அரச குடும்பத்தை விட்டு விலகியதைப்பற்றி டயானா கவலைப்பட்டிருப்பார்! - டினா ப்ரௌன், பத்திரிகையாளர்

படம்
               டினா ப்ரௌன் ஆங்கில அமெரிக்க பத்திரிகையாளர் டினா, டாட்லர், வேனிடி ஃபேர், தி நியூயார்க்கர், நியூஸ்வீக், தி டெய்லி பீஸ்ட் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணிபுரிந்த அனுபவங்களைக் கொண்டவர். இவருக்கு வயது 68 ஆகிறது. இவரது கணவர், புகழ்பெற்ற பத்திரிகையாளரான சர் ஹெரால்ட் ஈவன்ஸ்.  2007ஆம் ஆண்டு தி டயானா க்ரானிக்கல்ஸ் என்ற நூலை எழுதினார். தற்போது அதன் தொடர்ச்சியாக தி பேலஸ் பேப்பர் என்ற நூலை எழுதியுள்ளார். அரசு குடும்பத்தைச் சேர்ந்த டயானா இறந்து இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் நிறைவுகிறது. அவரிடம் பேசினோம். இப்போது டயானா உயிரோடு இருந்தால் அவர் எந்த மாதிரி செயல்பட்டிருப்பார்? அவர் அரசகுடும்பத்தில் இணைந்துதான் இருப்பார் என நினைக்கிறேன். ஹாரி, மேகன் போல பிரிந்திருக்க மாட்டார். அரச குடும்பத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருப்பார். பிரிந்துசெல்லாமல் ஒன்றாக இருக்க முயல்வார். தனது அடையாளத்தை கைவிட்டு கென்சிங்கன் மாளிகையை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். டயானாவுக்கு அவரது மருமகள் கேட்டிற்கும் நல்ல உறவு இருந்திருக்கும் என பலரும் சொல்லுகிறார்கள். ஆனால் இதில் நான் முரண்படுகிறேன். அவர் பிறரோடு போட்டிபோடு

இடம்பெயரும் மக்களுக்காக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்!

படம்
ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் பற்றி.... நேர்காணல் ரவி காந்த், செயலர், பொது விநியோகத்துறை ஒரு நாடு ஒரே ரேஷன்கார்டு பற்றிச் சொல்லுங்கள்.  நாடு முழுக்க ஒரே ரேஷன் கார்டு என்பது உணவு பாதுகாப்புச்சட்டப்படி விரைவில் அமலாகவிருக்கிறது. இதன்படி, வேலைதேடி பிற மாநிலங்களுக்கு செல்பவர்கள், தங்களது விரல்ரேகையை வைத்தாலே குறைந்த விலையில் அரிசி, பருப்பை பெற்று பயன்பெற முடியும். இதற்காக புதிய கார்டுகளை பெற வேண்டியதில்லை. இக்கார்டுகளை போலியாக பயன்படுத்தினால் என்ன செய்வீர்கள்? அதற்கான பாதுகாப்பு அம்சங்களையும் உருவாக்கி வருகிறோம். அவர்களிடம் பெறும் கைரேகை  போன்றவற்றை பயன்படுத்தி அவர் பெறும் உணவுப்பொருட்களை அளவைக் கண்காணிக்க முடியும். மத்திய தகவல் தளத்தில் எப்படி பதிவு செய்து கண்காணிப்பீர்கள்? அதற்குத்தான் பிஓஎஸ் இயந்திரம் உள்ளதே. அதன்மூலம் செய்யப்படும் உணவு ஒதுக்கீடு அனைத்தும் மத்திய அரசின் தகவல் தளத்தில் பதிவு செய்யப்படும். இதன்மூலம் பயனர் இந்தியாவில் எங்கு என்னென்ன பொருட்களை வாங்கினார் என்று அறிய முடியும். எந்தெந்த மாநிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளீர்கள்? வட