இடுகைகள்

பாலூட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கை பற்றி அறிந்துகொள்ள உதவும் நூல்கள்!

படம்
  ரீவைல்டிங் ஆப்பிரிக்கா கிரான்ட் ஃபோவிட்ஸ் - கிரஹாம் ஸ்பென்ஸ் ராபின்சன் சூழலியலாளர் கிரான்ட் மற்றும் ஸ்பென்ஸ் ஆகியோர் இணைந்து  பெருந்தொற்று காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் வனப்பாதுகாப்பு எப்படியிருந்தது என விளக்கியிருக்கிறார்கள்.  வொய் ஷார்க்ஸ் மேட்டர் டேவிட் ஷிஃப்மேன் ஜான் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி பிரஸ்  விருது பெற்ற தாவரவியலாளர் டேவிட், சுறாக்கள் பற்றி பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார். சுறாக்களைப் பற்றித்தான் நாம் நிறைய தவறான தகவல்களைப் பேசி வருகிறோம். புரிந்துகொள்ளாமல் வாழ்கிறோம். நம்மிடமிருந்துதான் சுறாக்கள் பயப்பட்டு வாழ வேண்டுமென பகடியாக எழுதியிருக்கிற தொனியில் நிறைய தகவல்களை வாசகர்களுக்கு கூறுகிறார்.  பிளாட்டிபஸ் மேட்டர்ஸ்  ஜாக் ஆஸ்பை ஹார்பர் கோலின்ஸ் பதிப்பகம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலூட்டிகள் படிக்கவும் அறியவும் வினோதமானவை. இதில் பிளாடிபஸ் என்ற விலங்கு பற்றி ஆய்வாளர் ஜாக் விரிவாக விளக்கி இதன் பின்னணியில் உள்ள புராண புனைவுகளையும் பேசியுள்ளார்.  எண்ட்லெஸ் ஃபார்ம்ஸ்  சீரியன் சம்னர்  ஹார்பர் கோலின்ஸ்  குளவிகள் பற்றி நிறைய சுவாரசியமான விஷயங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார். பலரும் பா

பால் எலும்புகளை வலுப்படுத்தும் என்பது உண்மையா?

படம்
பால் எனும் அமுதம்! மனிதர்கள் பாலூட்டி விலங்கினங்களிலேயே பால் குடிக்கும் பருவம் தாண்டியும் அதனை குடித்து வருகின்றனர். பால், தூக்கத்தை வரவைக்கும் சிறப்பு கொண்டதாகவும், பல்வேறு சத்துகள் நிரம்பியதாகவும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது பற்றி பார்ப்போம். பால் குடிப்பது காய்ச்சல் காலத்தில் மட்டுமல்ல, பிற நாட்களிலும் நல்லதுதான். இதிலுள்ள கால்சியம், பாஸ்பேட் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இப்போது பால் சார்ந்த பொருட்களின் மேல் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக பாலுக்கு பதிலாக வேறு பொருட்களை சாப்பிட்டு சத்துக்களை நாம் ஈடுகட்ட முடியும். பாலில் விட்டமின் சி, ஃபைபர், இரும்புச்சத்து ஆகியவை இல்லை. புரதம், சர்க்கரை, கொழுப்பு நிரம்பியுள்ளது. பசும்பாலில் 3.7 சதவீதம் கொழுப்பு, 3.4 சதவீதம் புரதம், 4.8 சதவீதம் லாக்டோஸ், 87.4 சதவீதம் நீர் உள்ளது. 1860ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூயி பாஸ்டர், நுண்ணுயிரிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் அழித்து பொருட்களைப் பதப்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் இன்று பால் தொழிற்சாலைகள் பாலை பதப்படுத்தி