பால் எலும்புகளை வலுப்படுத்தும் என்பது உண்மையா?




today milk GIF




பால் எனும் அமுதம்!

மனிதர்கள் பாலூட்டி விலங்கினங்களிலேயே பால் குடிக்கும் பருவம் தாண்டியும் அதனை குடித்து வருகின்றனர். பால், தூக்கத்தை வரவைக்கும் சிறப்பு கொண்டதாகவும், பல்வேறு சத்துகள் நிரம்பியதாகவும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது பற்றி பார்ப்போம்.
பால் குடிப்பது காய்ச்சல் காலத்தில் மட்டுமல்ல, பிற நாட்களிலும் நல்லதுதான். இதிலுள்ள கால்சியம், பாஸ்பேட் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இப்போது பால் சார்ந்த பொருட்களின் மேல் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது.
இதன்காரணமாக பாலுக்கு பதிலாக வேறு பொருட்களை சாப்பிட்டு சத்துக்களை நாம் ஈடுகட்ட முடியும்.
பாலில் விட்டமின் சி, ஃபைபர், இரும்புச்சத்து ஆகியவை இல்லை. புரதம், சர்க்கரை, கொழுப்பு நிரம்பியுள்ளது. பசும்பாலில் 3.7 சதவீதம் கொழுப்பு, 3.4 சதவீதம் புரதம், 4.8 சதவீதம் லாக்டோஸ், 87.4 சதவீதம் நீர் உள்ளது.

1860ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூயி பாஸ்டர், நுண்ணுயிரிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் அழித்து பொருட்களைப் பதப்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் இன்று பால் தொழிற்சாலைகள் பாலை பதப்படுத்தி விற்பனைக்கு அனுப்புகின்றன.

க்ரீம்
சாதாரணமாக பசுக்களிலிருந்து பெறும் பாலில் க்ரீம் கிடைக்கும். ஆனால் தொழிற்சாலை உற்பத்திக்கு இது சரிபடாது. இதற்கென உள்ள இயந்திரம் பாலை அதிவேகத்தில் சுழற்சிக்கு உள்ளாக்குகிறது. இதன் விளைவாக நமக்கு க்ரீம் கிடைக்கிறது.

ஐஸ்க்ரீம்

பால் அவ்வளவு எளிதில் உறையாது. அதிலுள்ள புரதம் மற்றும் கொழுப்பை உறைய வைத்து பிளேவர்களை தூவினால் ஐஸ்க்ரீம் ரெடி.

கன்டென்ஸ்டு மில்க்

பாலிலுள்ள 50 சதவீத நீரை ஆவியாக்கினால் கிடைப்பது கன்டென்ஸ்டு மில்க். இந்த நிலையில் இதில் நுண்ணுயிரிகள் வாழ முடியாது. இப்பாலைக் குடிக்கும்போது சர்க்கரை சேர்த்துக்கொள்வது சுவையை அதிகரிக்கும்.

பவுடர்!

பாலை 90 சதவீதம் காய்ச்சி அதிலுள்ள நீரை முற்றிலுமாக வெளியேற்றிவிட்டால் கிடைப்பதுதான் பால் பவுடர். சூடான காற்று மூலம் பவுடர் உலர்த்தப்படுவதால் பாக்டீரியா பாதிப்பு கிடையாது.

நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்