கோவிட் பாதிப்பும் அரசு செய்யவேண்டியதும்!




Image result for corona


வரும் மே 15க்குள் இந்தியாவில் கோவிட் -19 நோய் பாதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரம் முதல் 13 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

என்ன பிரச்னை?

அடிப்படையே பிரச்னைதான். கழிவறைகளையே ஜென்ம சனி பிடித்தவனுக்கு ஏற்படும் சிரமங்களை ஒத்து கட்டுபவர்கள் மருத்துவமனை படுக்கைகளை மட்டும் வைத்திருப்போமா என்ன? இந்தியாவில் பத்தாயிரம் பேருக்கு 07 சதவீத படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. இதுவே தென்கொரியாவில் பத்தாயிரம் பேர்களுக்கு 6 சதவீத படுக்கைகள் உள்ளன.

இந்தியர்கள் கொரோனா பாதிப்பிற்கு முன்னதாகவே நீரிழிவு உயர் ரத்த அழுத்தம் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் கொரோனா தொற்றும்போது அதன் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.

அரசு என்ன செய்யவேண்டும்?

கோவிட் -19 நோய் பாதிப்பைக் கண்டறிய இலவச மையங்களை அமைக்கவேண்டும். அதற்கான சிகிச்சையும் விலையின்றி அளிக்க  முன்வரவேண்டும்.

மருத்துவமனை படுக்கைகளை அதிகரிக்கவேண்டும்.

மக்கள் கூடுமிடங்களை தடை செய்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்படி செய்யவேண்டும்.

மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்து கிடப்பதால், வேலையிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசு குறைந்தபட்ச மாத ஊதியத்தை பரிசீலித்து அளிக்க முன்வரலாம்.

கோவிட் -19  பாதிப்பை கண்டறிய மொபைல் முறையில் வாகனங்களை தயார் செய்யலாம். இதன்மூலம் நோய் பாதிப்பு பிறருக்கு பரவுவதற்கு முன்னர் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும்.

நன்றி - இந்துஸ்தான் டைம்ஸ்