போதுமான ஊட்டச்சத்து என்பது உண்மையா?
![]() |
pixabay |
உடல் சிறப்பாக இயங்க வைட்டமின்களும் மினரல்களும் தேவை. ஆனால் இவை உடலில் எந்தளவுக்கு இருக்கவேண்டும் என்பதற்கான தினசரி அளவுகோல் உள்ளது. அதிகமானால் பல்வேறு சிக்கல்களை உடல் சந்திக்கும். குறைவானால் உங்களுக்கே தெரியும், நோய்கள் உருவாகும்.
வைட்டமின்கள் பாதிப்பு
உடலில் பல்வேறு உணவுப் பொருட்கள் மூலம் மெக்னீசியம் அதிகரித்தால் வயிற்றுப் போக்கு அதிகரிக்கும். கண்களுக்குத் தேவையான வைட்டமின் ஏ கூடுதலானால், எலும்புகள் அடர்த்தி குறையும். இந்த சத்து குறைந்தால் கண்களுக்கு லென்ஸ்கார்ட்டில் கண்ணாடி ஆர்டர் செய்யவேண்டியிருக்கும். விட்டமின் சி உடலில் குறைந்தால் மூக்கில் நிற்காமல் ரத்தம் கொட்டத் தொடங்கும்.
உலகளவில் 2.5 சதவீதம் பேர் அதிகளவு வைட்டமின்கள் உடலில் சேர்வதால் பல்வேறு பாதிப்புகளை அடைகின்றனர்.
என்ன செய்யலாம்?
ஒட்டுமொத்த மக்களுக்கும் பொதுவான பாதுகாப்பான வைட்டமின்களின் அளவு என்று ஒன்று கிடையாது. எனவே, முடிந்தளவு அனைத்து சத்துகளும் கிடைக்கும் அளவு உணவுப்பொருட்களை சாப்பிடுவது அவசியம். பால், முட்டை, அரிசி, முட்டை, இறைச்சி என அனைத்து பொருட்களையும் சாப்பிடுவது அவசியம். இல்லையென்றால் உடல் ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் தடுமாறத் தொடங்கும்.
உலக நாடுகள் மக்கள் ஆரோக்கியமான உணவுப்பொருட்களை அடையாளம் கண்டுகொள்ள உணவு லேபிளிங் முறையை அறிமுகப்படுத்தின. இதன் விளைவாக, எந்தப் பொருளில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு, கலோரி எந்த அளவில் உள்ளன என்பதை அறியலாம். இங்கிலாந்து அரசு தனது போக்குவரத்து சிக்னல்களைக் கூட ஆரோக்கியமான உணவுமுறையை வலியுறுத்தும்படி மாற்றி அமைத்துள்ளது. அங்கு பச்சை நிறம் அதிகமுள்ள உணவுப்பொருட்களை அதிகம் மக்கள் சாப்பிடவேண்டும் என அரசு பிரசாரம் செய்து வருகிறது.
நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்