பெருகும் பெண்கள் மீதான வெறுப்பும், பாகுபாடும்!






பெண்களுக்கு எத்துறையானாலும் அத்துறையில் உள்ளவர்களே ஆணோ, பெண்ணோ முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பார்கள். அப்படி இருப்பதில் அவர்களது மனதில் கெட்டிதட்டிப்போன பழமைவாதக் கருத்துகள் முக்கியக் காரணம்.
அப்படிப்பட்ட கருத்துகள் இப்போது மாறியிருக்குமா என்ற எண்ணத்தில் ஐ.நா சபை  எடுத்த ஆய்வு முடிகள் இதோ


உலகில் பத்தில் ஒன்பது பேர் பெண்கள் பற்றிய பழமைவாத முன்முடிவுகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதில் பெண் தலைவர்களும் அடங்குவர்.

பெண்கள் சிறப்பாக செயற்பட்டாலும் ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கல்வி முதல் வேலைவாய்ப்புகள் வரை திறமை இருக்கிறதோ இல்லையோ ஆண்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பார்ட்டியில் அறையும் கணவரை விவாகரத்து செய்யும் விவகாரத்தைப் பற்றி தப்பட் என்ற இந்திப்படம் பேசுகிறது. பெண்களை கணவர்கள் அடிப்பதும், உதைப்பதும் தவறு இல்லை என 28 சதவீதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 பாகிஸ்தான், நைஜீரியா, கத்தார் ஆகிய நாடுகளில் பெண்கள் மீதான பாகுபாடும் கட்டுப்பாடும் 90 சதவீதமாக உள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் இந்த சதவீதம் 50-60 சதவீதமாக உள்ளது.