அரசும் தனியாரும் இணைந்து பணிபுரிய வேண்டும்!



Image result for corona


கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பத்து இத்தாலியர்களில் ஒருவர் குணமாகி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ளவர்கள் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மருத்துவமனை தலைவர் நரேஷ் திரேகானிடம் பேசினோம்.


அரசும் தனியாரும் இணைந்து மருத்துவத்துறையில் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறதே?

கொரோனா போன்ற சூழல்களில் அரசிடம் கூட போதுமான படுக்கை வசதிகள், மருந்துகள், தங்கும் அறைகள் இருக்காது. இச்சூழலில் தனியாரின் மருத்துவ வசதிகளை அரசு பயன்படுத்திக்கொள்ள முடியும். சரியான மருத்துவர்கள், மருத்துவக் கருவிகள், வெண்டிலேட்டர் ஆகியவை நம்மிடம் போதுமான அளவு இல்லை. கொள்ளைநோய் சிகிச்சைக்கான செலவும் அதிகம். எனவே, முடிந்தவரை நோய் யாருக்கும் அதிகம் பரவாமல் இருந்தால் மட்டுமே பாதிப்பு குறைவாக இருக்கும். அதற்காகத்தான் அரசு ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.


இப்போது பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு சிகிச்சை செய்துள்ளீர்கள். இதிலிருந்து  பலருக்கும் சிகிச்சை செய்வதற்கான திறனை பெற்றுவிட்டீர்களா?

நாங்கள் இப்போதுதான் இந்த நோயை சமாளிப்பதற்கான பாடங்களை கற்று வருகிறோம். கொரோனா பாதிப்பு எங்களது பணியாளர்களுக்கு தொற்றிவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். இருக்கிறோம்.

தனியார் மருத்துவமனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சோதனைகளை செய்யலாமே?

அனைவரும் முடிந்தளவு தங்கள் பங்கிற்கான விஷயங்களைச் செய்து வருகிறோம். சிகிச்சைக்கான பணம் செலவு செய்ய முடியாதவர்களுக்கு, நாங்கள் இலவச சோதனைகளை செய்து கொடுக்கிறோம்.


கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சைகளை வழங்குகிறீர்கள்?


வயதானவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்பதால் அரசு பரிந்துரைத்தை குளோரோக்வின் மருந்தையும், ஹெச்ஐவிக்கு பயன்படுத்தும் மருந்துகளையும் கலந்து பயன்படுத்துகிறோம். இதெல்லாம் அவர்களின் நுரையீரல் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்ததே.

நன்றி - இந்துஸ்தான் டைம்ஸ்