கொலையைக் கண்டுபிடிக்கும் தில் போலீஸ் - கல்கி படம் எப்படி?
கல்கி 2019 - தெலுங்கு
இயக்கம்
ஒளிப்பதிவு
இசை
கொல்லாப்பூர் என்ற ஊரில் நடைபெறும் கொலை வழக்குதான் கதை. அங்கு நரசப்பா என்பவரும் அவரது தம்பியும்தான் கோலோச்சுகிறார்கள். ஊரில் அவர்களை மீறி யாரும தொழில் செய்ய முடியாது. இந்த நேரத்தில் நரசப்பாவின் தம்பி ஊரிலுள்ள கோவில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறார். கூடவே அவரின் நண்பர்களும் இதில் பலியாகிறார்கள். யார் இந்த கொலையை செய்தது என்பதுதான் கதை.
கருடவேகாவுக்குப் பிறகு டாக்டர் ராஜசேகரின் படம். நாயகனுக்கான பில்டப்புகள் இருந்தாலும் அதைவிட அசத்துவது கதைதான். இதில் அம்சமாக பொருந்துகிறார் டாக்டர் ராஜசேகர். முதலில் என்ன இவர் சும்மா ஊர் சுற்றுகிறார், கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டிருக்கிறார் என்ற அனைவருக்கும் தோன்றும். ஆனால் அதற்குப்பிறகுதான் ஏராளமான ட்விஸ்டுகள் உள்ளன.
ஆஹா
படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் பிரமாதமாக பொருந்தியுள்ளன. அசோக்பாபு என்ற கதாபாத்திரம் வில்லனாக மாறுவது சூப்பர் ட்விஸ்ட். அதிலும் இறுதி பதினைந்து நிமிடம் அனைத்து முடிச்சுகளையும் சரசரவென அவிழ்க்கிறது. பின்னணி இசை, ஒளிப்பதி வு என அனைத்தும் அம்சமாக அமைந்துள்ளது. படத்தின் இடைவேளை காட்சி நன்றாக அமைந்துள்ளது. படத்தின் சில குறைகளையும் தாண்டி நிலப்பரப்பு, மனிதர்கள், அவர்களின் உருவ அமைப்பு, குறிப்பிட்ட காலகட்டத்தை காட்சி படுத்துவது என இயக்குநர் குழு நன்றாக உழைத்துள்ளது. ஆற்றில் படகு செல்லும் காட்சி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. காட்டில் நடைபெறும் சண்டைக்காட்சி அசத்தலாக படமாக்கப்பட்டுள்ளது.
ஐயையோ
நாயகனுக்கான மழை ஃபைட், காதல் அத்தியாயம், பேய் படம்போல செல்லும் அரண்மனை காட்சிகள் எரிச்சல் தருகின்றன.
கோமாளிமேடை டீம்