ஸ்மார்ட்மீட்டர் மின்சார சேவையை ஒழுங்குப்படுத்தும்!






Image result for smart meter in india

2017ஆம்ஆண்டு இந்திய அரசு, ஸ்மார்ட் மீட்டரை வீடுகளில் பொருத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியது. இதன்விளைவாக, எல்இடி விளக்குகளின் விலையை 80 சதவீதம் அளவுக்கு குறைத்தது. சாதாரண மின் மீட்டர்களை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.அது மின்கட்டணத்தை அளவிடுவதற்காக இருக்கும். ஸ்மார்ட் மீட்டர் உங்களது மின்பயன்பாடுகளை அளவிட்டு அதற்கான தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்வோம். எதற்கு இப்படி சேகரிக்கவேண்டும் என கேள்விகள் எழலாம்.

மின்சார சேவைகளை வழங்கும் பல்வேறு அரசு நிறுவனங்கள் மின்சார வீணடிப்பால் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இதனை தீர்க்கவே ஸ்மார்ட் மீட்டர் எனும் முயற்சி. இதற்காக தொடங்கப்பட்டுள்ள நிறுவனத்தின் இயக்குநர், சௌரப் குமார் இதுபற்றி பேசினார்


இத்திட்டம் பற்றி விளக்குங்கள்.

நாங்கள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை இந்தியாவிலுள்ள டில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா ஆகிய இடங்களில் நிறுவியுள்ளோம்.  நாங்கள் டில்லியில் மட்டும் பத்து லட்சம் மீட்டர்களை நிறுவியுள்ளோம். பீகாரில் இப்போதுதான் பணிகளைத் தொடங்கியுள்ளோம். உத்தரப் பிரதேசத்தில் ஐந்து நிறுவனங்கள் மூலம் மீட்டர்களை நிறுவி வருகிறோம்.

ஸ்மார்ட் மீட்டர்கள் மூலம் வருமானம் உயருமா?

பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மீட்டர்கள் மூலம் (தலா ஒரு மீட்டர்) மாதம் 200 ரூபாய் வருமானம் நிறுவனத்திற்கு கிடைக்கும். இந்தியாவில் தோராயமாக இந்த வருமானம் ரூ.450 ஆக உள்ளது. இந்தக்கட்டணத்தை 90 மீட்டர்களுக்கு கட்டணமாக வசூலிக்கிறார்கள். சாதாரணமாக உங்கள் வீட்டில் இந்த ஆண்டு ஒரு ஏசியை நிறுவுகிறீர்கள். அதனால் உங்கள் வீட்டு மின்சார யூனிட் கூடும். அதற்கான கட்டணத்தை செலுத்துவீர்கள். ஆனால் உங்கள் வீட்டிலுள்ள சாதனங்கள், அதற்கு தேவையான மின்சார அளவு என்பதை சேவை வழங்கும் நிறுவனம் கணிக்க முடியாது. ஸ்மார்ட் மீட்டர் மூலம் இந்த தகவல்களை நிறுவனம் பெற்று அதற்கேற்ப சேவையை மேம்படுத்த முடியும். நிறுவனத்திற்கான வருவாயும் பெருகும்.

அடுத்ததாக, வெளிப்படைத்தன்மை உண்டு. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என மின்சாரக்கட்டணத்தை நீங்கள் கட்டவேண்டிய அவசியம் இல்லை. இதற்கான மொபைல் ஆப் உண்டு. அதனால் தினசரி மின்சாரத் தேவையை நீங்கள் பார்த்து அதனை குறைக்கவும் முயற்சிக்கலாம். கட்டணத்தையும் உடனடியாக எங்கிருந்து வேண்டுமானாலும் கட்ட முடியும்.

நீங்கள் சொல்வது சரி. இதிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் பயன்களைப் பற்றி பேசுங்கள்.

இந்தியாவில் வழங்கப்படும் மின்சாரத்தில் 83 சதவீதம் மட்டுமே உரிய கட்டணம் செலுத்தப்பட்டு பெறப்படுகிறது. மீதியுள்ள 17 சதவீத மின்சாரத்திற்கு என்ன கணக்கு என்றே தெரியவில்லை. அதன் காரணமாக தேவையான வருமானம் அரசுக்கு கிடைப்பதில்லை. இதன் வருவாய் மதிப்பு ஒரு லட்சம் கோடி ஆகும். ஏறத்தாழ நடப்பு ஆண்டின் கல்வி பட்ஜெட் இது.

அரசின் திட்டம் என்ன?

அடுத்த மூன்று ஆண்டுகளில் சாதாரண மீட்டர்களை ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றவிருக்கிறோம். 250 மில்லியன் வீடுகளில் இந்த மாற்றம் நிகழவிருக்கிறது. மீட்டர் தயாரிப்பாளர்கள் மூன்று மாதங்களில் லட்சக்கணக்கான மீட்டர்களை தயாரித்து வழங்கப்போகிறார்கள். இதன்மூலம் எளிதாக மக்களுக்கு மீட்டர்களை வழங்க முடியும்.


நன்றி - இந்தியா ஸ்பென்ட்