இடுகைகள்

யூடியூப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கை நாயகர்கள்- கார்த்திக் ஆர்யன், பா ரஞ்சித், தனுஷ், புவன் பாம்

படம்
கார்த்திக் ஆர்யன் எப்போதுமே புதுசுதான்!  கார்த்திக் ஆர்யன் இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன், தனது 20 வயதில் முதல் படத்தில் நடித்தார். 2011இல் வெளியான பியார் கா பன்ச்னாமா என்ற படம் அது. அதனை பார்த்தவர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். லவ் ரஞ்சன் இயக்கிய நவீனமான காதல் கதைப்படம் அது.  குவாலியரில் பிறந்த கார்த்திக் ஆர்யன் பிறகுதான் பிரபலமாகத் தொடங்கினார். இத்தனைக்கும் அவருக்கு சினிமா பின்புலம் ஏதும் கிடையாது. பதினெட்டு வயதில் மும்பைக்கு வந்தவர் கார்த்திக்.  எனக்கு எந்த இரண்டு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரே வாய்ப்புதான். அதில் என்னை நிரூபிக்க வேண்டியிருந்தது என்பவர் சொல்லியபடியே இரண்டு பன்ச்னாமா பாகங்களில் நடித்தார். பிறகு சோனு கி டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்திலும் நடித்து நமது மனதை கவர்ந்தார்.  பிறகு நடித்த லூக்கா சூப்பி, பதி, பத்னி ஆர் வோ ஆகிய படங்கள் மெல்ல ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டியது. வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் போது கூட புதிய இயக்குநர்களோடு பணியாற்றவே மெனக்கெடுகிறார். வண்டி நன்றாக ஓடும்போது எதற்காக இந்த ரிஸ்க் என பலரும் கார்த்திக்கிடம் கேட்கிறார்கள்தான். ஆனால் அவர் அதைப்பற்றி கவ

மக்களின் முன்னே நின்று அவர்களை சிரிக்க வைப்பது எளிதானது அல்ல! கேரி மினாட்டி

படம்
                                                            கேரி மினாட்டி கேரி மினாட்டி யூடியூப் பிரபலம் உங்களை பிக்பாஸில் பார்க்க முடியும் என சிலர் சொல்லுகிறார்கள். அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். இல்லை. இப்போதைக்கு இல்லை. நான் அந்த நிகழ்ச்சியை பின்தொடர்வது இல்லை. இன்று தங்கள் கருத்தை சொல்லுவதற்கு அனைவருக்கும் பிடித்திருக்கிறது. தன்னைத்தானே எள்ளல் செய்வதும் பலரும் செய்துவருகிறார்கள். இது நேர்மையானதும் கூடத்தான். நீங்கள் ஆசியாவில் அதிக மக்கள் பின்தொடரும் யூடியூபர். இது உங்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா? என்னுடைய முன்கதையை பலரும் தெரியாமல் பேசுவது எனக்கு சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கும். நீங்கள் மக்கள் கூட்டத்தின் முன் நின்று பேசுவது எளிதல்ல. நான் செய்வது உலகில் வேடிக்கையான ஒன்று. நீங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறீர்கள். இதனை உங்கள் டிரேட்மார்க் என்று சொல்லலாமா? இல்லை. இந்த பாணி நிகழ்ச்சியை எனது அடையாளம் என்று கூறமுடியாது. நான் எடுக்கும் சில விஷயங்கள். இதற்கு சரியானவை என்று தோன்றுவதால், அதனைப் பயன்படுத்துகிறேன். அவ்வளவுதான். மக்கள் விரும்பினால்

டிரெண்ட் செட்டர்கள் 2019 - டிஜிட்டல் தொழிலதிபர்கள்

படம்
டிரெண்ட் செட்டர்கள் புவன் பாம் யூடியூப் - பிபி கி வைன்ஸ் 15.4 மில்லியன் பார்வையாளர்கள் 2015 ஆம் ஆண்டு தொடங்கிய யூடியூப் சேனல் பல்வேறு காமெடி வீடியோக்களால் நிரம்பி வழிகிறது. ஜம்மு காஷ்மீரில் வெள்ளப்பாதிப்பு நிகழ, அதனை டிவி நிருபர் காட்சிபடுத்துகிறார். மகனை இழந்த தாயிடம், உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். அதனைப் பார்த்த புவன், அதனை கிண்டல் செய்து வீடியோ ஒன்றை தயார் செய்து பதிவிட்டார். அப்போது அதனை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். பின்னர் 2015ஆம்ஆண்டு யூடியூப் சேனலைத் தொடங்கி, டீனேஜ் பிரச்னைகள் முதற்கொண்டு ஆன்டி பிரச்னை வரை அனைத்தையும் பகடியாக பதிவுசெய்யத் தொடங்கினார் புவன். டிட்டு மாமா, ஜான்கி ஜி என்ற இவரின் பல்வேறு வேடங்கள் இணையத்தில் செம ஹிட் அடித்தன. “நான் நல்ல கருத்தை வீடியோக்கள் வழியே சொல்ல நினைக்கிறேன். அதில்  சிலசமயங்களில் கடும் சவாலை சந்திக்கிறேன்.’ என்கிறார். ஜோனிதா காந்தி பாடகி ஜோனிதா மியூசிக் - யூடியூப் சேனல் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஜோனிதா கனடாவில் படித்து வளர்ந்தவர். இன்று இந்திய மொழிகளில் பத்துக்கும் மேற

மக்களை படைப்பாளர்களாக்கியது இணையம்தான்! - புவன்ராம்

படம்
டிஜிட்டல் புரட்சி மக்களை மாற்றியது யூடியூபில் செல்வாக்கான நபராக வலம் வருகிறார் புவன்ராம். 25 வயதில் பத்து லட்சம் நேயர்களைச் சம்பாதித்து விட்டார். இதுபோதாதா அவரிடம் பேச.... நீங்கள் யூடியூபில் எவ்வளவு செல்வாக்கானவராக திகழ்கிறீர்கள்? நான் மக்களை பொருட்களை வாங்க வைப்பவராக என்னை நினைக்கவில்லை. காரணம், எனது வேலை பொழுதுபோக்காளராக,  படைப்புகளை உருவாக்குபவர் என்றுதான் நினைக்கிறேன். வெளிப்படையாகச்சொன்னால், யாரும் இங்கே யாரையும் அடக்கி தன் விருப்பங்களைத் திணிக்க முடியாது. டிஜிட்டல் புரட்சி நிறைய விஷயங்களை மாற்றியுள்ளதாக நினைக்கிறீர்களா? நிச்சயமாக. இன்று தவறான போலிச்செய்தி வலைத்தளத்தில் பரவுகிறது என்றால் உடனே அதனை யாரும் நம்புவதில்லை. உண்மையான செய்தி என்ன என்று இளைஞர்கள் அவர்களாகவே உணர்ந்துகொள்கிறார்கள். மக்களையும் படைப்பாளர்களாக மாற்றியது டிஜிட்டல் புரட்சிதான். பொருளின் தரத்திற்கு அதனைப் பரிந்துரைக்கும் பிரபலங்கள் முக்கியக் காரணம் என்று சொல்லலாமா?  நான் ஒரு ஷாம்பூவை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன் என்றால் அதனை நான் பயன்படுத்தி இருக்கவேண்டும். மேலும் ஷாம்பூ என்பது அனைவரின் தலை