டிரெண்ட் செட்டர்கள் 2019 - டிஜிட்டல் தொழிலதிபர்கள்
டிரெண்ட் செட்டர்கள்
புவன் பாம்
யூடியூப் - பிபி கி வைன்ஸ்
15.4 மில்லியன் பார்வையாளர்கள்
2015 ஆம் ஆண்டு தொடங்கிய யூடியூப் சேனல் பல்வேறு காமெடி வீடியோக்களால் நிரம்பி வழிகிறது. ஜம்மு காஷ்மீரில் வெள்ளப்பாதிப்பு நிகழ, அதனை டிவி நிருபர் காட்சிபடுத்துகிறார். மகனை இழந்த தாயிடம், உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். அதனைப் பார்த்த புவன், அதனை கிண்டல் செய்து வீடியோ ஒன்றை தயார் செய்து பதிவிட்டார். அப்போது அதனை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். பின்னர் 2015ஆம்ஆண்டு யூடியூப் சேனலைத் தொடங்கி, டீனேஜ் பிரச்னைகள் முதற்கொண்டு ஆன்டி பிரச்னை வரை அனைத்தையும் பகடியாக பதிவுசெய்யத் தொடங்கினார் புவன்.
டிட்டு மாமா, ஜான்கி ஜி என்ற இவரின் பல்வேறு வேடங்கள் இணையத்தில் செம ஹிட் அடித்தன. “நான் நல்ல கருத்தை வீடியோக்கள் வழியே சொல்ல நினைக்கிறேன். அதில் சிலசமயங்களில் கடும் சவாலை சந்திக்கிறேன்.’ என்கிறார்.
ஜோனிதா காந்தி
பாடகி
ஜோனிதா மியூசிக் - யூடியூப் சேனல்
4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்
ஜோனிதா கனடாவில் படித்து வளர்ந்தவர். இன்று இந்திய மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி வருகிறார். செவன் அப் தயாரித்த கண்ணே கண்ணே பாடலில் லியோன் ஜேம்ஸூடன் பாடி ஆடியவர் நினைவிருக்கிறதா? அவர்தான் ஜோனிதா.
இந்திய இசையமைப்பாளர்களாக ஏ.ஆர்.ஆர், பிரிதம் ஆகியோரின் இசையமைப்பில் புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ளார். "நான் முதலில் யூடியூபில் பாடல்களை பாடி வீடியோக்களை பதிவிட்டபோது, சரி, தவறு என்று வித்தியாசம் தெரிவதில்லை. பலரின் பின்னூட்டங்களைப் பெற்று என்னை மேம்படுத்திக்கொண்டு வருகிறேன். கனடாவில் படித்து வளர்ந்த தால் முதலில் இந்தி மொழிக்கான உச்சரிப்பு பிரச்னை இருந்தது. இன்று அந்த பிரச்னைகளை சரி செய்து என்னை மீட்டுக்கொண்டுள்ளேன்." என்கிறார். நல்லா வருவீங்கம்மா....
ஜியா காஷ்யப்
ஆடை வடிவமைப்பாளர்
இன்ஸ்டாகிராம்
நீங்கள் வலைப்பூ தொடங்கி அதற்காக வேலையை விடும் விஷயத்தை செய்யாதீர்கள். ஏனெனில் இன்ஸ்டாகிராமில் 50 சதவீதம் ஆர்டர்களை பெற்று வருமானம் பார்த்து உங்கள் மீது நம்பிக்கை வந்தால் வேலையை விடுங்கள் என்று கூறுகிறார். 2009ஆம் ஆண்டிலிருந்து வலைப்பூ, இன்ஸ்டாகிராம் என பதிவிட்டு ஃபேஷன் தொழிலை செய்து வருகிறார் ஜியா காஷ்யப்.
தன்யா கான்சிஜோ
பயண எழுத்தாளர்
2,80,000 பார்வையாளர்கள்
பயணம் செய்வது தன்யாவுக்குப் பிடிக்கும். அதைத்தான் இன்று தான் சம்பாதிப்பதற்கான வழியாகவும் பின்பற்றுகிறார். 2016 ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு ஜாலி டிரிப் சென்றதை மூன்று வாரங்கள் எடிட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார். அதற்கு வந்த பின்னூட்டங்களின்படி அவர் தனது செயல்பாடுகளை மாற்றிக்கொண்டார். இன்று புகழ்பெற்ற பயண எழுத்தாளராக, பதிவராக இருக்கிறார். நிறுவனங்களை விளம்பரப்படுத்துவதும் இதில் உண்டு. சமூகவலைத்தளத்தில் நீங்கள் யாரையும் ஏமாற்ற முடியாது. நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியேதான் இருக்க முடியும்.
நன்றி - இந்தியா டுடே