தவறுகளை தட்டிக்கேட்போம்! -ரான்பாக்சி முதல் இன்போசிஸ் வரை

 whistleblower adam schiff GIF






இன்போசிஸ் நிறுவனம் அண்மையில் தவறான வணிக நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதன் விளைவாக நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. இக்குற்றச்சாட்டை முனவைத்தவர் பற்றி பலரும் மறந்திருப்பார்கள். இவர்கள் மீதும் இவர்களின் குடும்பத்தினர் மீதும் கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து மீண்டிருப்பதோடு பல்வேறு நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளை இவர்கள் வெளிக்கொண்டு வந்துகொண்டே இருக்கிறார்கள்.


தற்போது பங்குச்சந்தையை முறைப்படுத்தும் செபி, நிறுவனங்களின் தவறான நடவடிக்கையைத் தெரியப்படுத்தினால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளிலான பரிசை வழங்குகிறது.

தவறுகளை வெளிப்படுத்துவர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அவர்களின் புகைப்படம், முகவரி ஆகியற்றை ரகசியமாக பாதுகாக்கின்றனர். 2014ஆம் ஆண்டு இதுபோல தவறுகளை கண்டுபிடித்து கூறுகிறவர்களை பாதுகாக்க அரசு சட்டம் இயற்றியுள்ளது.

நிறுவனங்களின் விதிமீறல்களை அரசுக்கு சொல்வது, அமெரிக்காவில் பராக் ஒபாமாவின் ஆட்சியில் 2008ஆம்ஆண்டுதான் தொடங்கியது.அப்போது பொருளாதார சிக்கல்கள் தொடங்கியிருந்தன. எனவே பங்குச்சந்தையைக் காப்பாற்றவே அரசு, விதிமீறல்களைச் செய்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து அதில் 14 முதல் 30 சதவீதம் தவறுகளைக் கண்டுபிடித்தவர்களுக்கு வழங்கியது. இதற்காக டாட் ஃபிராங்க் சட்டத்தை அரசு கொண்டு வந்தது. இம்முறையில் ரான்பாக்சியில் நடந்த தில்லுமுல்லுகளை தினேஷ் தாக்கூர் என்ற முன்னாள் பணியாளர் அரசுக்கு சொல்லி அதற்கு பரிசாக, 47 மில்லியன் தொகையை பரிசாக பெற்றார். அந்நிறுவனத்திற்கு 500 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.

இம்முறையில் இன்போசிஸ், யெஸ் பேங்க், சன் பார்மா, ஐசிஐசிஐ பேங்க், பிஎன்பி பேங்க் ஆகியோர் சிக்கினர். கம்பெனிக்குள் இருந்துகொண்டே அனைத்து ரகசியங்களையும் தெரிந்துகொண்டு விமர்சிப்பவர்கள் கோடாரிக் காம்பு என்பார்கள்.மரத்திலே கோடாரி செய்து பின்னர் அம்மரத்தைப் பதம் பார்ப்பதை இப்படி சொல்வார்கள். இது விசுவாசம் சார்ந்த பதம் என்பதால் அதை விடுங்கள். நமக்கு நீதிதான் முக்கியம். சோறுதான் சாசுவதம். ஜமாய்ப்போம்.

நன்றி - இடி மேகசின்















பிரபலமான இடுகைகள்