பாட்காஸ்ட் தொடங்கு சூப்பர் பொருட்கள் இதோ! - டெக் புதுசு





jessica williams dancing GIF by 2 Dope Queens Podcast





2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 62 மில்லியனுக்கும் மேல் பாட்காஸ்ட் கேட்டு வருகின்றனர். வீடியோக்களை பார்த்தால் கண்கள் சோர்வுறும். அதைவிட கேட்பது ஈசியல்லவா? அதனால் அதைச்சார்ந்த நிறைய பொருட்களும் நன்றாக விற்கின்றன.


மைக்ரோபோன்

ப்ளூ நிறுவனத்தின் யெட்டி என்ற மைக் பல்வேறு திசைகளிலும் திருப்பி வைத்து உங்களுடைய காந்தர்வ குரலை பதிவு செய்து பின்னி எடுக்கலாம். நீங்களும் இனி புரொப்ஷனலாக மாறி பாட்காஸ்டுகளை தயாரித்து உலகிற்கு வழங்கலாம்.

பாப் பில்டர்

நிகழ்ச்சிகளை கேட்கும்போது டொய், பாப், ப்ர்ர். என ஒலி வந்தால் நிகழ்ச்சி சிறக்குமா? இதற்காகத்தான் பாப் பில்டர் பயன்படுகிறது. நீவர் நிறுவனத்தின் ஆறு அங்குல பாப் பில்டர் பயன்படுத்தினால் உங்கள் தேனினும் இனிய குரல் தொந்தரவின்றி பயனர்களை அடையும்.

ஹெட்போன்கள்

சோனியின் தயாரிப்பு பிழை தராது என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அதன் ஹெட்போன்தான் உங்களுக்கு உதவப்போகிறது. என்ன பதிவு செய்கிறீர்களோ அதனை அப்படியே யார் வேண்டுமானாலும் கேட்கலாம். சோனி எம்டிஆர் 7506எஸ் எனும் ஹெட்போன், எந்த பேஸ் விஷயங்களையும் தமன் சாய் போல சேர்க்காமல் உள்ளது உள்ளபடி ஒலியைத் தரும். சந்தோஷமாக அப்டேட் பிரச்னை இன்றி ஹெட்போன் பயன்படுத்த சோனி சிறந்த தீர்வு.


ஒலியிலிருந்து பாதுகாப்பு

ஒளிப்பதிவில் ஒளி, ஒலி இருக்கலாம். ஆனால் ஒலிப்பதிவில் ஒலி எதிரொலித்தால் கேட்பவர்களுக்கு எரிச்சலாகும். எனவே ஒலியிலிருந்து பாதுகாப்பு தேவை. வெளிப்புற ஒலிகளை தவிர்க்கும் மோனோபிரைஸ் ஐசோலேசன் ஷீல்டு கருவி உங்களுக்கு வெளிப்புற ஒலிகளிலிருந்து கிரியேட்டிவிட்டியை  அணையவிடாமல் பார்த்துக்கொள்ளும். 5.5 இன்ச் திக்னெஸ்ஸில் உள்ளது இதன் தன்மை ஒலியை கசியவிடாது.



நன்றி - பாப்புலர் சயின்ஸ்






பிரபலமான இடுகைகள்