பிரபஞ்ச புதல்வனுக்கு நேரும் சவால்கள்! - தோர்கல்






Image result for torgal comics



பிரபஞ்சத்தின் புதல்வன் - தோர்கல்

வண்ணம் - ரோசின்ஸ்கி - எண்ணம் - வான் ஹாமே


வைகிங்குகளால் வளர்க்கப்படும் தோர்கல் என்ற வீரனின் கதை. மனோதிடமும், வீரமும் கொண்டவனை கான்டல்ஃப் என்ற வைகிங் தலைவர் கடலின் நடுவிலுள்ள பனிக்கட்டியில் கட்டிவைத்து கொல்ல நினைக்கிறார். என்ன காரணம் காதல்தான். தலைவரின் மகள் ஆரிஸியாவை தோர்கல் காதலித்தார். இது கான்டல்ஃப்புக்கு தெரியவர அவர் தோர்கல்லை வைகுண்டத்திற்கு அனுப்ப நினைக்கிறார். இதற்காகத்தான் அந்த கொடூர தண்டனை.

தோர்கல் இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க பெயர் தெரியாத ஒற்றைக்கண் கொண்ட பெண் ஒருவள் உதவுகிறாள். ஆனால் தன்னைப் பற்றி எதையும் அவள் தோர்கல்லிடம் பகிர மறுக்கிறாள். அவள் யார், அவளுக்கும் கான்டல்ஃப்பிற்கும் உள்ள தொடர்பு, ஆரிஸியாவை தோர்கல் சந்தித்தாரா என்பதுதான் காமிக்ஸின் மீதியுள்ள கதை.

பார்பேரியன் ரக படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த காமிக்ஸை ரூ.60 கொடுத்து வாங்கிப் படிக்கலாம்.