செக்ஸ் பேச்சு தரும் பிரச்னைகள் - ட்ரீம் கேர்ள் படம் எப்படி?
ட்ரீம் கேர்ள்
ராஜ் சாண்டில்யா
ஒளிப்பதிவு - அசீம் மிஸ்ரா
பாடல் - மீட் ப்ரோஸ்
ஆர்ஆர் - அபிஷேக் அரோரா
நாடகங்களில் சீதையாக வேஷமிட்டு தந்தையிடம் திட்டு வாங்கும் இளைஞர், வேலை தேடிக்கொண்டிருக்கிறார். அப்போது பேருந்தில் பார்த்து வேலை கேட்டு கம்பெனிக்கு செல்கிறார். அந்த கம்பெனியில் தரும் வேலை, பேசுவதுதான்.
அந்த வேலைதான் அவருக்கு காசு கொடுக்கிறது. பின் காதலி என அனைத்துமே அதன்பின்னர்தான் வருகிறது. ஆனால் பிரச்னை தொடங்குவதும் அதிலிருந்துதான். அந்த இளைஞர்தான் ஆயுஷ்மான் குரானா.
ஆஹா...
ஆயுஷ்மான் குரானாதான். பெண்குரலில் பேசி இளைஞர்களை மயக்குவதுதான் அவரது வேலை. இதை ஜாலியாக நினைத்து செய்யும்போதுதான் விதி கரம் கட்டி விளையாடுகிறது. ஓரல் செக்ஸ் பேச்சுதான் குரானாவின் வேலை. இதில்தான் சம்பாதித்து கார் வாங்குகிறார். ஆனால் ஒருகட்டத்தில் இதன் பிரச்னைகள் தெரிய வர பின்வாங்க நினைக்கிறார். முதலாளி தன் அதிர்ஷ்ட லட்சுமியை விடுவாரா? தவிப்பு, காதல், விரக்தி, சோகம் என அத்தனை உணர்ச்சிகளிலும் நடித்து பிரமாதப்படுத்துகிறார்.
இவரின் நடிப்பு வேகத்தில் நுஷ்ரத் பாரூச்சாவின் முகம் கூட நமக்கு நினைவுக்கு வரமாட்டேன்கிறது. அடுத்து குரானாவின் தந்தையான அன்னு கபூரின் காமெடி பிரமாதமாக இருக்கிறது.
ஐயையோ..
அடிக்கடி மதுபானத்திற்குள் நாயகன் முழ்குவது போல கதையும் முழுகிவிடுகிறது. பாடல் இசையும் லயிக்கவில்லை. பின்னணி மட்டும் பரவாயில்லை ரகம்.
சீரியல் டைப் படங்கள் பார்ப்பவர்களுக்கு இது கொஞ்சம் புதிதாக இருக்கும். மற்றபடி மசாலா படங்களுக்கான பாடல்கள் எல்லாமே உண்டுதான். ஆனால் என்ன ஆயுஷ்மான் குரானாவின் நடிப்புக்காகவே படம் இருபது கோடியில் தயாராகி 200 கோடி வசூலைத் தாண்டிவிட்டது.
கோமாளிமேடை டீம்