சாத்தான் சொல்லித்தான் சுட்டேன்! - டேவிட் பெர்கோவிட்ஸ்
அசுரகுலம்
டேவிட் பெர்கோவிட்ஸ்
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள மக்களை கொலை பீதியில் ஆழ்த்தியவர் டேவிட். சன் ஆஃப் சாம் கொலைகாரர், .44 காலிபர் கொலைகாரர் என்று அழைக்கப்பட்ட சீரியல் கொலைகார ர். நியூயார்க்கில் ப்ரூக்ளின் நகரில் 1953ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று பிறந்தார். இவரது பெற்றோருக்கு இவர் பிறந்தபோது மணமாகவில்லை. அது அவர்கள் மனமுறிவால் பிரிந்துபோக உதவியது. குழந்தையாக இருந்த டேவிட், தம்பதி ஒருவருக்கு த த்து கொடுக்கப்பட்டார். சிறுவயதில் இருந்தே டேவிட்டுக்கு வன்முறையான எண்ணங்கள் இருந்தன. பெரியளவு யாருடனும் கலந்துபேசாத ஆள். திருட்டில் வல்லவர். ஏதாவது ஓரு இடத்தில் நெருப்பு எரிந்தால் அங்கேயே அதை ரசித்துக் கொண்டு நின்றுவிடுவார். இதனை பைரோமேனியா என்று கூறுகிறார்கள். நெருப்பை ரசிப்பது, ஓர் இடத்தை தீக்கிரையாக்கி மகிழ்வதை உளவியல் மருத்துவர்கள் முக்கியமான சீரியல் கொலைகார ர்களுக்கான அறிகுறியாக சொல்கிறார்கள். அத்தனையும் அப்படியே டேவிட்டுக்கு பொருந்திப்போனது.
பதினான்கு வயதிலேயே பள்ளியில் ஏராளமான ஒழுக்கம், நடத்தை தொடர்பான குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டார் டேவிட். அந்நேரத்தில் அவரின் வளர்ப்பு தாய் மார்பக புற்றுநோய் பாதிப்பில் இறந்துபோனார். அவருக்கு இருந்த நெருக்கமான ஓரே உறவு அவர். பின்னர், வளர்ப்புத் தந்தை மற்றொரு அம்மாவை கொண்டு வந்தார். அவர்களுக்கு உறவு சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
பின்னர் அமெரிக்க ராணுவத்தில் மூன்று ஆண்டுகள் சேவை செய்தார். கௌரவமான பெயருடன் வெளியே வந்தார். தனது உயிரியல் தாயைச் சந்தித்தார். அவரின் தந்தை இறந்துவிட்ட தகவலை அப்போதுதான் அறிந்து வேதனைப்பட்டார். பின்னர், அவரின் தாயுடன் அவர் தொடர்புகொள்ளவில்லை. உடல்ரீதியான - ப்ளூகாலர் வேலைகளைச் செய்யத் தொடங்கினார்.
1975ஆம் ஆண்டு தனது கொலைப்பயணங்களை டேவிட் தொடங்கினார். மிச்செல் ஃபோர்மன் மற்றும் மற்றொரு பெண் என இருவரையும் கத்தியால் குத்தினார். இது ட்ரையல்தான். கத்தி சிறப்பாக செயல்படவில்லை என அறிந்துகொண்டார். அதற்கும் இதுபோல முயற்சிகள் தேவைதானே? 1976 அக்டோபர் 23 அன்று டோனா லாரியா, வாலென்டி என்ற இளம்பெண்கள் இருவர் காரில் அமர்ந்திருந்தார். அங்கு வந்த டேவிட் இருவரையும் நோக்கி சாவகாசமாக துப்பாக்கியால் மூன்று முறை சுட்டார். பயன் என்ன? வாலென்டி பிழைத்துக்கொண்டார் லாரியா அங்கேயே இறந்துபோனார். ஆனால் மஞ்சள் நிற காரில் அவர் அங்கே வந்தார். பயன்படுத்திய துப்பாக்கி . 44 காலிபர் என போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். நவம்பர் 27 அன்று இரு இளம்பெண்களிடம் ராணுவ வீரர் உடையணிந்து வந்தவர் வழிகேட்டார். சொன்ன பெண்களைக் கவனிக்காமல் பாக்கெட்டிலிருந்த ரிவால்வர் எடுத்து வழி காட்டியதற்கு நன்றி சொன்னார். இருபெண்களில் ஒருவருக்கு தோட்டா பாய்ந்ததில் சக்கர நாற்காலியே வாழ்க்கையானது.
1977 ஆம் ஆண்டு இதுபோல காரில் அமர்ந்திருந்த இருவரை சுட்டார் டேவிட். இம்முறை அவரை காரில் இருந்தவர்கள் தெளிவாக பார்த்துவிட்டனர். அடையாளம் காட்டிவிட்டனர். அதில் ஒருவர் டேவிட்டின் தோட்டாவுக்கு அங்கேயே பலியாகி விட்டார். மார்ச், ஏப்ரல் என கிடைத்தவர்களை போட்டுத்தள்ளிக்கொண்டிருந்தார். என்னதான் கொலை செய்தாலும் நாலுபேர் நம்மைப் பிடிக்க பின்னால் வருவது, துரத்துவது நல்ல திரிலைத் தருமே? இப்படி யோசித்த டேவிட் கடிதம் எழுதி போலீசுக்கு உதவினார். நீளமான முடிகொண்ட பெண்களை குறிப்பாக எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து சுட்டார். இதனால் நகர பெண்களை முடிகளை வெட்டி தங்களைப் பாதுகாக்க தொடங்கினார். அழகை விட உயிர் முக்கியமாச்சே!
டேவிட்டின் கார்தான் துருப்புச்சீட்டு. அதை நான்கு பேரை பலிகொடுத்தே போலீஸ கண்டுபிடித்தது. அறையைத் திறந்தால் சாத்தான் படம், நகர வரைபடம் என வித்தியாசமாக இருந்தது. காரில் இருந்த துப்பாக்கியையும் கைப்பற்றினார்கள். அங்கு வந்த டேவிட் தன் குற்றங்களை அவரே ஒப்புக்கொண்டார். அந்த குடியிருப்பில் இருந்த சாத்தானின் ஆசிபெற்ற நாய் சொல்லித்தான் கொலைகளைச் செய்தேன் என்றார். 25 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. தொண்ணூறிலிருந்து, சுலிவன் எனும் சிறையில் வாழ்கிறார் டேவிட்.
வின்சென்ட் காபோ
நன்றி - க்ரைம் மியூசியம்
கில்லர்ஸ் புக்